ஹோம் /நியூஸ் /திருச்சி /

வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன் கொள்ளை: தொடர் கொள்ளையால் பீதியில் திருவெறும்பூர் மக்கள்...

வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன் கொள்ளை: தொடர் கொள்ளையால் பீதியில் திருவெறும்பூர் மக்கள்...

பீரோ உடைத்து நகை கொள்ளை

பீரோ உடைத்து நகை கொள்ளை

கடந்த சில தினங்களாகவே இப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளில் சிலிண்டர்கள், அரிசி மூட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் தினந்தோறும் திருட்டுப் போவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    திருவெறும்பூர் அருகே வீட்டின் பீரோவை உடைத்து 27 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கைலாஷ் நகர் அண்ணாசாலை, 3வது தெருவை சேர்ந்தவர் வெண்ணிலா, இவர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் லேப் டெக்னிஷியனாக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை, வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு வெண்ணிலா பணிக்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதனையடுத்து  வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 27 சவரன் நகை மற்றும் ரூ. 25 ஆயிரம் திருடுபோனது வெண்ணிலாவுக்கு தெரியவந்தது. பின்னர் இது குறித்து தகவலறிந்து வந்த திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் விசாரணை நடத்தினர்.

    Also Read:  தேவர் குருபூஜை - தங்க கவசத்தை பெறப்போவது யார் ? ஓபிஎஸ் -ஈபிஎஸ் இடையே போட்டி

    கடந்த சில தினங்களாகவே இப்பகுதியில் உள்ள, 10க்கும் மேற்பட்ட வீடுகளில் சிலிண்டர்கள், அரிசி மூட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் தினந்தோறும் திருட்டுப் போவது வழக்கமாக இருக்கிறது. எனவே இந்த பகுதியில் போலீசார் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தி, திருடர்களின் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Published by:Arunkumar A
    First published:

    Tags: Crime News, Trichy