ஹோம் /நியூஸ் /திருச்சி /

பால் விலை உயர்வு : தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!

பால் விலை உயர்வு : தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!

பாஜகவினர் போராட்டம்

பாஜகவினர் போராட்டம்

மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து மலைக்கோட்டை மண்டல் தலைவர் பிரகாஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பட்டம் நடைபெற்றது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruchirappalli | Tiruchirappalli | Tamil Nadu

  திமுக அரசு பதவி ஏற்ற பின்பு பால் கட்டணம், மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வு  ஆகியவற்றை உயர்த்தி உள்ளது. இதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாஜக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

  அந்த வகையில் திருச்சியில் அண்ணா சிலை ஸ்ரீரங்கம் திருவரம்பூர் உள்ளிட்ட 18 இடங்களில் பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  Also Read : ஆளுநர் மக்களை சந்தித்தால் அரசியல்வாதிகளுக்கு குளிர் ஜுரம் வந்துவிடும் - தமிழிசை சௌந்தரராஜன்

  திருச்சி பாஜக மலைக்கோட்டை மண்டலம் சார்பாக திருச்சி அண்ணா சிலை அருகில் பால் விலை உயர்வு , மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து மலைக்கோட்டை மண்டல் தலைவர் பிரகாஷ் தலைமையில் கண்டன ஆரப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக திருச்சி மாவட்ட பொது செயலாளர் ஒண்டி முத்து கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன உரை நிகழ்த்தினார்  .

  இதில் திருச்சி மலைக்கோட்டை பகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

  செய்தியாளர் : கோவிந்தராஜ்

  Published by:Raj Kumar
  First published:

  Tags: BJP, DMK, Trichy