ஹோம் /நியூஸ் /திருச்சி /

திமுக-வை விமர்சிப்பதால் என் மீது வழக்கு போடுறாங்க - பாஜகவின் சூர்யா சிவா குற்றச்சாட்டு

திமுக-வை விமர்சிப்பதால் என் மீது வழக்கு போடுறாங்க - பாஜகவின் சூர்யா சிவா குற்றச்சாட்டு

பாஜக சூர்யா சிவா

பாஜக சூர்யா சிவா

Trichy News : காவல்துறைக்கு என் மீது எப்படியாவது வழக்கு தொடர வேண்டும் என்ற நோக்கில், யார் புகார் கொடுத்தாலும் வழக்கு போடுவதாக பாஜக சூர்யா சிவா குற்றச்சாட்டு.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

"ஆளும் கட்சியான  திமுகவை தொடர்ந்து விமர்சிப்பதால், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக என் மீது திட்டமிட்டு வழக்கு தொடர்ந்து உள்ளனர்" என்று பாஜக ஓ.பி.சி. பிரிவு மாநிலச் செயலாளர் சூர்யா சிவா கூறியுள்ளார்.

திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி. இவருக்கு, திருச்சி சண்முகா நகர் மூன்றாவது குறுக்குச் சாலையில்  சொந்தமாக, 'ஏபிசி மாண்டேசரி' பள்ளி மற்றும் வீட்டு கட்டிடம் இணைந்து உள்ளது. 'இந்த வளாகத்தை கடந்த ஒரு வருட காலமாக காலிச் செய்ய மறுத்தும், 6 மாதமாக வாடகை தராமல் ஏமாற்றுகின்றனர்.

இதுகுறித்து கேட்டால், பாஜகவின் ஓபிசி அணியின் மாநிலச் செயலாளர் சூர்யா சிவா மற்றும் அவரது மனைவி அத்தினா ஆகியோர் எங்களை கொலைச் செய்து விடுவதாக மிரடட்டுவதாக', கடந்த, 2-ம்  தேதி திருச்சி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்திருந்தார்.

இதுகுறித்து போலீசார் சூர்யா சிவா மீது வழக்குப் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. பாஜகவின் ஓபிசி அணியின் மாநிலச் செயலாளர் சூர்யா சிவா, அவரது மனைவி அத்தினா ஆகியோர் நேற்று திருச்சி காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்தனர்.ஆர்த்தி மற்றும் அவரது கணவர் மீது புகார் கொடுத்தனர்.

இதுகுறித்து சூர்யா சிவா செய்தியாளர்களிடம் கூறியபோது, "என்மீது கொடுக்கப்பட்ட புகாரில் எவ்வித உண்மையும் இல்லை. ஆர்த்தி மற்றும் அவரது கணவர் இணைந்து பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து குண்டர்களை வைத்து மிரட்டிய ஆதாரங்களுடன் புகார் அளிக்க வந்துள்ளோம்.

காவல்துறைக்கு என் மீது எப்படியாவது வழக்கு தொடர வேண்டும் என்ற நோக்கில், யார் புகார் கொடுத்தாலும் உடனடியாக அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பது போல, என் மீது வழக்குகள் ஜோடிக்கப்பட்டு வருகின்றன.

Also Read: 'திருடன்.. திருடன்'.. அலறல் சத்தம் கேட்டு ஒன்றுகூடிய கூட்டம்.. வசமாக சிக்கிய செல்போன் திருடன்!

அதற்கு முக்கிய காரணம், நான் ஆளும் கட்சியாகிய திமுகவை தொடர்ந்து விமர்சிப்பதால், என்னை பழிவாங்கும் நோக்கத்தோடு காவல்துறை செயல்படுகிறது. இந்த பள்ளி வளாக கட்டிடம் தொடர்பான புகாரிலும் இதே போன்று என் மீது காவல்துறை திட்டமிட்டு வழக்கு பதிவு செய்துள்ளது" என்று கூறினார்.

Published by:Ramprasath H
First published:

Tags: BJP, Surya, Tamil News