Home /News /trichy /

திமுகவை எதிர்ப்பதால் பாஜக தமிழகத்தில் வளர்கிறது - மத்திய அமைச்சர் முரளிதரன்

திமுகவை எதிர்ப்பதால் பாஜக தமிழகத்தில் வளர்கிறது - மத்திய அமைச்சர் முரளிதரன்

மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன்

மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன்

Tiruchirappalli | "தமிழகத்தில் திமுகவை எதிர்ப்பதால் பாஜக வளர்கிறது" என்று திருச்சி விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் கூறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
திருச்சியில் ஹிந்தி பிரச்சார சபாவில் நடந்த  ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் முரளிதரன் விமான நிலையத்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, கச்சதீவை மீட்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் பற்றி நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. அது குறித்து தகுந்த நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுகவின் ஊழல்களை மற்றும் குடும்ப ஆட்சியை தொடர்ந்து பாஜக எதிர்த்தும், சுட்டிக்காட்டியும் வருகிறது. இதன் காரணமாக தமிழக மக்களின் ஆதரவு பாஜகவிற்கு அதிகரித்து வருகிறது. தேசிய பாதுகாப்பிற்காக சீன உளவு கப்பலை தீவிரமாக மத்திய அரசு கண்காணித்து வருகிறது" என்றார்.

Also see... மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ்..வைரல் சம்பவம்

மேலும், "சாவர்க்கர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என பெரும்பாலான தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தெரிவிக்கிறார்களா?" என்ற கேள்விக்கு பதிலளித்தவர்,
"திமுக மட்டுமே அவ்வாறு சொல்லி வருகிறது. எந்த கட்சி சொன்னாலும் அவரது வரலாற்றை படித்தால் அவரை பற்றி தெரிந்து கொள்ளலாம்" என்றார்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: BJP, DMK, Trichy

அடுத்த செய்தி