ஹோம் /நியூஸ் /திருச்சி /

மகாராஜா போல தனி ராஜ்ஜியம் நடத்த முயற்சிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி; திருநாவுக்கரசர் விமர்சனம்

மகாராஜா போல தனி ராஜ்ஜியம் நடத்த முயற்சிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி; திருநாவுக்கரசர் விமர்சனம்

திருநாவுக்கரசர் - ஆர்.என் ரவி

திருநாவுக்கரசர் - ஆர்.என் ரவி

மகாராஜா போல தனி ராஜ்ஜியம் நடத்த முயற்சிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என திருநாவுக்கரசர் விமர்சனம் செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி விமான நிலைய ஆலோசனை குழு கூட்டம், அக்குழுவின் தலைவரும் திருச்சி மக்களவை உறுப்பினருமான திருநாவுக்கரசர் தலைமையில் இன்று நடந்தது. இதில் விமான நிலைய இயக்குனர் சுப்ரமணி மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டும் பணிகள் ஜூன் மாதத்தில் நிறைவடையும் என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “நேரு ஆட்சி காலத்திலிருந்து காங்கிரஸ் அரசு அமைந்த போதெல்லாம் உருவாக்கிய பொது துறை நிறுவனங்களை மோடி அரசு தனியாருக்கு விற்கிறது. இது கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ரவிக்கு அரசியல்வாதியாக செயல்படுகிற எல்லா தகுதியும் இருக்கிறது, பாஜக தலைவர் அண்ணமைலையை அந்த பொறுப்பிலிருந்து மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக ஆர்.என். ரவியை தமிழ்நாடு  பாஜக தலைவராக ஆக்கலாம். பா.ஜ.க தலைவர் பதவியில் அவர் சிறப்பாக செயல்படுவார்.

இவரால் மாநில அரசுக்கும் கெடுதல் மத்திய அரசுக்கும் கெடுதல். ஆளுநர் பதவி என்பது நிலை இல்லாதது அவர் தமிழ்நாடு, தமிழகம் என்று பேசுவது அவசியம் இல்லாதது. இது போன்று தொடர்ந்து அவர் பேசுவது அவர் விளம்பரத்திற்காக தான். "cheap publicity"யை அவர் விரும்புகிறார்.  பல்வேறு பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்தாமல் இருக்கிறார். தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய சட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்துள்ளார். அவர் செய்ய  வேண்டிய பணிகளை செய்யாமல் மஹாராஜா போல தனி ராஜ்ஜியம் நடத்த முயற்சிப்பது தவறான முன்னுதாரணம். அவர் அவரை மாற்றிக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் அவரை மாற்ற வேண்டும். ஆளுநரின் போக்கு கண்டனத்திற்கு உரியது .

அண்ணாமலை பத்திரிக்கையாளர்களை தவறாக பேசுவது வருந்தத்தக்கது. அவரை பத்திரிக்கையாளர்கள் கண்டிக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்பது அவர்களது உரிமை அதற்கு அவர் பதில் கூறலாம் கூறாமலும் இருக்கலாம் ஆனால் பத்திரிக்கையாளர்களை திட்டுவதும் ஒருமையில் பேசுவதும் தவறு.

அண்ணாமலை அரசியல்வாதி  அல்ல. அவர் போலீசில் இருந்து வந்தவர் எனவே அரசியல்வாதியிடம் எதிர்பார்ப்பது போல் அவரிடம் எதிர்பார்ப்பது  ஏமாற்றம் தான்” என்றார்.

செய்தியாளர் : கோவிந்தராஜ் (திருச்சி)

First published:

Tags: Annamalai, RN Ravi, Thirunavukkarasar