ஹோம் /நியூஸ் /திருச்சி /

தமிழ்நாட்டில் பெயர் சொல்லும் அளவுக்கு இருக்கும் ஒரே சாமியார் நித்யானந்தா தான்..! - திருச்சி சூர்யா

தமிழ்நாட்டில் பெயர் சொல்லும் அளவுக்கு இருக்கும் ஒரே சாமியார் நித்யானந்தா தான்..! - திருச்சி சூர்யா

திருச்சி சூர்யா - நித்தியானந்தா

திருச்சி சூர்யா - நித்தியானந்தா

தமிழ்நாட்டில் பெயர் கூறும் அளவு இருக்கும் ஒரே சாமியார் நித்யானந்தா மட்டுமே என பாஜக ஓபிசி பிரிவின் மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா சிவா தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruchirappalli, India

  திருச்சி சிவாவின் மகனும் பாஜக ஓபிசி பிரிவின் மாநில பொதுச் செயலாளராக உள்ள திருச்சி சூர்யா சிவாவுக்கு தர்மரட்சகர் விருது கொடுத்துள்ளதாக நித்தியானந்தா அறிவித்து உள்ளார். அதற்கு நன்றி கூறும் வீடியோவை தனது டிவிட்டர் பதிவில்  சூர்யா சிவா பதிவிட்டுள்ளார்.புதன்கிழமை நடந்த விஜயதசமி நிகழ்ச்சியில் இவருக்கு தர்மரட்சகர் விருது வழங்கப்பட்டது. இந்து மதத்தின் புகழை ஊடகங்களில் தொடந்து பரப்பி வருவதால் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக நித்யானந்தா அறிவித்துள்ளார்.

  இந்து மதத்தை பாதுகாக்கும் வகையில் ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதை பாராட்டி நித்யாநந்தா தர்ம ரட்சகா என்கிற விருதை வழங்கி உள்ளார் இதற்கு பெருமைப்படுகிறேன். நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என சூரிய சிவா அவரது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

  இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருச்சி சூரிய சிவா கூறுகையில், நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் உள்ளது அவரிடம் விருது பெற்றுள்ளீர்கள் என்ற கேள்விக்கு அவர் மீது ஆயிரம் சர்ச்சைகள் இருக்கலாம். அவர் மீதான குற்றச்சாட்டுகள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. வட மாநிலங்களில் பல சாமியார்கள் இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் பெயர் கூறும் அளவு இருக்கும் ஒரே சாமியார் நித்யானந்தா.

  இதையும் படிங்க: ”என் மரணத்திற்கு முழு காரணம் ஆன்லைன் ரம்மிதான்” வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவர்..!

  அவர் மீது அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகள் இருக்கலாம் அதிலிருந்து அவர் வெளியே வருவார். நித்யானந்தா பிரபலமானவர் என்பதால் பொய்யான புகார்கள் எழுவது சாதாரண விஷயம் தான். அவர் மீது கூறும் குற்றச்சாட்டுகள் நூறு சதவீதம் தவறு" என திருச்சி சிவா பதில் அளித்துள்ளார்.

  செய்தியாளர்: கோவிந்தராஜ் (திருச்சி)

  Published by:Kannan V
  First published:

  Tags: Nithyananda, Suriya, Tiruchi Siva, Trichy