முகப்பு /செய்தி /திருச்சி / திருச்சியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற நடிகர் அஜித் - உற்சாகமான ரசிகர்கள், பரபரப்பு போஸ்டர் ஒட்டி அதகளப்படுத்தினர்!

திருச்சியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற நடிகர் அஜித் - உற்சாகமான ரசிகர்கள், பரபரப்பு போஸ்டர் ஒட்டி அதகளப்படுத்தினர்!

நடிகர் அஜித்

நடிகர் அஜித்

Ajith : திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்றார். இதை அறிந்த ரசிகர்கள் அங்கே திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில், 47ஆவது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி, பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 25ஆம் தொடங்கியது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1,300 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என பங்கேற்பாளர்கள் பிரிக்கப்பட்டு 16, 19, 21 ஆகிய வயதுக்கு உட்பட்ட பிரிவினர்; 21 முதல் 45 வயது; 45 முதல் 60 வயது மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ள பிரிவினர் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டியானது 28ஆம் தேதி வரை நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது.

இந்நிலையில், துப்பாக்கி சூடும் போட்டிகளில் மிகுந்த ஆர்வம் காட்டும், நடிகர் அஜித் நேற்று திருச்சிக்கு முன்னறிவிப்பின்றி வந்து துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்றார். அவர் வந்த விஷயம் மெல்ல கசிந்து அவர் ரைபிள் கிளப்பில் இருப்பது ரசிகர்களுக்கு தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, உடனே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ரைபிள் கிளப் முன்பு கூடினர்.

திருச்சியில் ஒட்டப்பட்ட போஸ்டர்

கூட்டம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு சென்றது. இதை அறிந்த அஜித் அவர்களை அமைதிப்படுத்தும் விதமாக, மாடியில் காட்சியளித்து அவர்களுக்கு கையசைத்துவிட்டு திரும்பிச் சென்றார்.

Must Read : ஜனநாயகத்தின் பாதுகாவலர்.. பாஸ்போர்ட் வழக்கில் அண்ணாமலையை பாராட்டிய நீதிமன்றம்

அடுத்த அரைமணி நேரத்திற்குள், அஜித் இரண்டு கைகளையும் தூக்கி ‘தம்ஸ் அப்’ காட்டும் போட்டோவுடன் கூடிய போஸ்டர்கள், திருச்சி கே.கே.நகர், மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமாக ஒட்டப்பட்டன. இதனால், அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

First published:

Tags: Actor Ajith, Ajith, Shooting, Trichy