முகப்பு /செய்தி /Trichy / அதிமுகவில் பூகம்பத்தை கிளப்ப காத்திருக்கும் எம்ஜிஆரின் உயில்!

அதிமுகவில் பூகம்பத்தை கிளப்ப காத்திருக்கும் எம்ஜிஆரின் உயில்!

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர்

Trichy : எம்ஜிஆர் உயில்படி ஜெயலலிதா போட்டியிட தயாராக இருந்தும், அவரை எதிர்த்து போட்டியிட யாரும் தயாராக இல்லாததால் அவரே தொடர்ந்து பொதுச் செயலாளராக பதவி வகித்தார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தில் இருந்து வரும் நிலையில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் வருகிற 11-ம் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் நேற்று திருச்சியில் செய்தியாளர்களை சந்திந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் , "'என்றைக்கு ஒரு தொண்டன் இந்த இயக்கத்தை தலைமையேற்று வழி நடத்துகிறானோ அன்றுதான் எம்.ஜி.ராமச்சந்திரனின் ஆத்மா சாந்தியடையும்' என்று கூறியவர் எம்ஜிஆர்.  எம்ஜிஆர் உயில்படி, அவருக்கு பின்னால் இந்த இயக்கத்தை வழிநடத்த ஒன்றரை கோடி தொண்டர்களிடம் தேர்தல் நடத்தி அதிமுக பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஈபிஎஸ், ஓபிஎஸ் என்று யார் வேண்டுமானாலும் போட்டியிட்டு வெற்றிப் பெறட்டும். அப்படி தேர்தல் நடத்தினால் நானும் போட்டியிடுவேன் ஆயிரம் பேரை போட்டியிடவும் வைப்பேன்.கட்சி விதிகளை திருத்தலாம். எம்ஜிஆரின் உயிலை யாரும் திருத்த முடியாது. அந்த உயில் தற்போது முன்னாள் நீதிபதி அரிபரந்தாமனிடம் உள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்

அந்த உயிலின்படி இன்றுவரை சத்யா ஸ்டுடியோ வருமானம் அதிமுகவிற்கு சென்று கொண்டிருக்கிறது. எம்ஜிஆர் உயில்படி தேர்தல் நடத்த ஓப்புக்கொண்டால், நீதிமன்றமே முன் நின்று தேர்தலை நடத்தி, முடிவுகளை அறிவித்து விடுவார்கள்.

எம்ஜிஆரின் விருப்பப்படி செயல்படாமல் குறுக்கு வழியில் பொதுச்செயலாளர் பதவியை யாரும் கைப்பற்ற நினைத்தால், எனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன். எம்ஜிஆர் உயில்படி ஜெயலலிதா போட்டியிட தயாராக இருந்தும், அவரை எதிர்த்து போட்டியிட யாரும் தயாராக இல்லாததால் அவரே தொடர்ந்து பொதுச் செயலாளராக பதவி வகித்தார்" என்றார்.

First published:

Tags: ADMK, EPS, OPS - EPS, Tamil News, Tamilnadu, TamilNadu Politics