Home /News /trichy /

சொத்துவரி, மின் கட்டணம் உயர்வுதான் திமுக ஆட்சியின் சாதனைகள் - எடப்பாடி பழனிசாமி

சொத்துவரி, மின் கட்டணம் உயர்வுதான் திமுக ஆட்சியின் சாதனைகள் - எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை, பெண்கள் உரிமையோடு கேட்பதாகவும், ஆனால் அரசாங்கம் நிதி இல்லை என்று கைவிரித்து விட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
    சொத்து வரி உயர்வு மற்றும் மின் கட்டணம் உயர்வு தான் திமுக ஆட்சியின் சாதனைகள் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

    திருச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவபதி இல்ல விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆகியும் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றார். அதிமுக திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருவதாகவும், மு.க.ஸ்டாலின் போட்டோஷூட் முதலமைச்சராக இருப்பதாகவும் சாடினார்.

    கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், கல்வி கடன் ரத்து என்ற எந்த வாக்குறுதிகளையும் திமுக நிறைவேற்றவில்லை என்றும், அதற்கு மாறாக சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு இவைதான் திமுக ஆட்சியின் சாதனைகள் என்று குறிப்பிட்டார் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை, பெண்கள் உரிமையோடு கேட்பதாகவும், ஆனால் அரசாங்கம் நிதி இல்லை என்று கைவிரித்து விட்டதாகவும் விமர்சித்தார்.

    மேலும், திமுக உடன் கூட்டு சேர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை பிளவுபடுத்த நினைப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: AIADMK, Edappadi palanisamy, Trichy

    அடுத்த செய்தி