ஹோம் /நியூஸ் /திருச்சி /

திருச்சியில் தீண்டாமை கொடுமை புகாரில் சிக்கிய அரசுப்பள்ளி… போக்சோவை தொடர்ந்து மற்றொரு சர்ச்சை

திருச்சியில் தீண்டாமை கொடுமை புகாரில் சிக்கிய அரசுப்பள்ளி… போக்சோவை தொடர்ந்து மற்றொரு சர்ச்சை

மாவட்ட ஆட்சியரிடம் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியரிடம் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

திருச்சியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளி ஒன்றில் தீண்டாமை கொடுமை நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இதே பள்ளியில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மற்றொரு சர்ச்சையில் பள்ளி சிக்கியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உப்பிலியபுரம் ஒன்றியம் நெட்டவேலம்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, 120 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த சில மாதத்திற்கு முன், இப்பள்ளியில் பணிபுரிந்த தமிழாசிரியர், கண்பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளியான மோகன்தாஸ் என்பவர், பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள், பள்ளியின் ஆங்கில ஆசிரியை லில்லியிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் அதை அவர் கண்டுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. அதையடுத்து அப்பள்ளி மாணவிகள், "1098- சைல்டு லைன்" எண்ணிற்கு தொடர்புக் கொண்டு புகார் கொடுத்தனர். அதனடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் மோகன்தாஸ், லில்லி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவுச் செய்தனர். மோகன்தாஸ் கைது செய்யப்பட்டார். தனது மீதான போக்சோ வழக்கினால் மனமுடைந்த ஆசிரியை லில்லி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த பரபரப்பே இன்னும் ஓயாத நிலையில், 'இப்பள்ளியில் தீண்டாமை கொடுமை நிலவுவதாக' இப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் புகார் கொடுத்து, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

சஸ்பென்ஷனில் இருந்த சவுக்கு சங்கரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்தது தமிழக அரசு

பள்ளி தலைமையாசிரியர் ராஜசேகரனுக்கு ஆதரவாக அழைத்து வரப்பட்ட அம்மாணவர்கள் அளித்த புகாரில், 'பட்டியலின மாணவர்களை சீருடையிலும், மற்ற மாணவர்களை சாதாரண உடைகளில் வரசொல்லி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தங்கராஜ் கட்டாயப்படுத்துவதாக' குறிப்பிட்டுள்ளனர். பள்ளி மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டு; ஆசிரியை தற்கொலை என தொடரும் பிரச்னைகள் காரணமாக, பள்ளி தலைமையாசிரியர் ராஜசேகரன் பணியிட மாற்றம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

தற்போது இப்பள்ளியில், தலைமையாசிரியர் தலைமையில் ஒரு அணியாகவும், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்படுகின்றனர். பள்ளி தலைமையாசிரியர் தன்னை தற்காத்து கொள்ள, தீண்டாமைக் கொடுமை என்ற விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இவர்கள் இருவரது 'அரசியல்' காரணமாக, கடந்த, 20 நாட்களாக பள்ளியில் எந்த பாடங்களும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விவகாரம் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் கேட்டபோது, "போக்சோ விவகாரம் குறித்து, முசிறி கல்வி மாவட்ட அலுவலர் பாரதி விவேகானந்தன் பள்ளியில் விசாரணை நடத்தி உள்ளார். அதன்பின்னர், பள்ளியில் தீண்டாமை இருப்பதாக என்னிடம் புகார் கொடுத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த, வரும் திங்கட்கிழமையன்று, மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) மற்றும் மாவட்ட கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இருதரப்பினர் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.நானும் அந்த பள்ளிக்கு நிச்சயம் நேரில் சென்று ஆய்வு செய்வேன். புகார் உண்மையாக இருக்கும்பட்சத்தில் சம்பந்தபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Published by:Musthak
First published:

Tags: Trichy