Home /News /trichy /

ஓபிஎஸ் சுயநலத்திற்காக சாதியை பயன்படுத்துகிறார் - அதிமுக மாவட்ட செயலாளர் பரபரப்பு குற்றச்சாட்டு

ஓபிஎஸ் சுயநலத்திற்காக சாதியை பயன்படுத்துகிறார் - அதிமுக மாவட்ட செயலாளர் பரபரப்பு குற்றச்சாட்டு

ஓபிஎஸ்- ப.குமார்

ஓபிஎஸ்- ப.குமார்

Trichy : ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தொண்டர்களின் செல்வாக்கை இழந்து விட்டனர் என அதிமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் கூறியுள்ளார்.

“ஓபிஎஸ் தனது சுயநலத்திற்காக சாதியை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறார்” என்று முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த, அதிமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில், மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பி.,யுமான ப.குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஓபிஎஸ், தான் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயத்திற்கு எந்த காலத்திலும் ஒரு நன்மையும் அவர் செய்ததில்லை. அவர் முக்குலத்தோருக்கு ஆதரவாக இருப்பவர் என்றால் சசிகலாவை முதல்வராக்க விடாமல் தடுத்து தர்மயுத்தம் செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

ஓபிஎஸ் தனது சுயநலத்திற்காக சாதியை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறார். தற்போது அதிமுகவில், 19 முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட செயலாளர்களாக உள்ளனர். அவர்களில், 2 பேர் தவிர மற்ற, 17 பேரும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

நாங்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமி, ஜாதி மதம் பாராமல் பணியாற்றுவார் என்று உறுதியாக நம்புகிறோம். ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தொண்டர்களின் செல்வாக்கை இழந்து விட்டனர். மக்களின் ஆதரவும் அவர்களுக்கு இல்லை.

ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் உள்ளது. 95 சதவீத தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் தான் உள்ளனர். உதிரிகள் மட்டுமே ஓபிஎஸ் பக்கம் உள்ளனர். அவர்களும் விரைவில் உதிர்ந்து போவார்கள் என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஓபிஎஸ்-ம், அவரது மகனும் திமுகவுடன் நேரடியாகவே தொடர்பு வைத்துள்ளதும், திமுகவை வெளிப்படையாக பாராட்டுவதையும் கண்டு தொண்டர்கள் கொந்தளித்து போய் உள்ளனர். கருணாநிதியின் ஆட்சியை ஓபிஎஸ் பாராட்டி பேசியதும், அவரது மகன் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்ததையும் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

Must Read : அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் பேனர் கிழிப்பு..!

வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். மீண்டும் தமிழகத்தில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைக்கும். ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா சுற்றுப்பயணங்களால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது" என்றார்.
Published by:Suresh V
First published:

Tags: ADMK, EPS, OPS, Trichy

அடுத்த செய்தி