Home /News /trichy /

நடிகர் விக்ரமை காண முண்டியடித்த ரசிகர்கள் மீது தாக்குதல்.. திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு

நடிகர் விக்ரமை காண முண்டியடித்த ரசிகர்கள் மீது தாக்குதல்.. திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு

திருச்சி - விமான நிலையத்தில் நடிகர் விக்ரம்

திருச்சி - விமான நிலையத்தில் நடிகர் விக்ரம்

Tiruchirappalli | நடிகர் விக்ரமை பார்ப்பதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ரசிகர்கள் மீது சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
    நடிகர் விக்ரமை பார்க்கும் ஆர்வத்தில் திருச்சி விமான நிலையத்தில் கூட்டமாக நின்ற ரசிகர்களை மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் அடித்து உதைத்து விரட்டினர். 

    நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோப்ரா'. இப்படம் விநாயகர் சதுர்த்தி நாளான வரும் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது, திரைப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். படத்தின் புரமோஷனுக்காக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் ரசிகர்களை சந்தித்து நடிகர் விக்ரம் உரையாடி வருகிறார்.

    அதில் ஒரு பகுதியாக, திருச்சி ஜோசப் கல்லூரியில் மாணவர்களுடன் நடிகர் விக்ரம் உரையாடும் நிகழ்ச்சி செவ்வாயான்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு நடிகர் விக்ரம் சென்றார். விமான நிலையத்தில் அவரை வரவேற்க நூற்றுக் கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தனர்.

    விமான நிலைய நுழைவு வாயிலில் கூடியிருந்த ரசிகர்களை மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். நடிகர் விக்ரம் விமான நிலையத்துக்கு வந்ததும் ஆர்வ மிகுதியால் ரசிகர்கள், பாதுகாப்பு படை வீரர்களை தாண்டி விமான நிலையத்திற்குள் செல்ல ஆரம்பித்தனர்.

    Also see... Cobra: விக்ரமின் கோப்ரா திரைப்படத்திற்கு UA  சான்றிதழ் வழங்க தணிக்கைக் குழு மறுப்பு

    இதனால் அங்கிருந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் விக்ரம் ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தியும், கால்களால் எட்டி உதைத்தும் கூட்டத்தை கலைத்தனர். ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தும் மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.



    விமான நிலைய பாதுகாப்புக்கு நிற்கும் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் முறையாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடாததே இந்த குளறுபடிகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்களோ, நட்சத்திரங்களோ பயணங்களை மேற்கொள்வது அவர்களது உரிமை. உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியது போலீசாரின் கடமை.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Actor Vikram, Cobra Movie, Crime News, Trichy

    அடுத்த செய்தி