Home /News /trichy /

'வெந்து தணிந்தது காடு' படத்திற்கு வந்தவர்களுக்கு மரக்கன்று, மஞ்சப்பைகள் வழங்கிய சிம்பு ரசிகர்கள்

'வெந்து தணிந்தது காடு' படத்திற்கு வந்தவர்களுக்கு மரக்கன்று, மஞ்சப்பைகள் வழங்கிய சிம்பு ரசிகர்கள்

மரக்கன்று, மஞ்சப்பைகள் வழங்கி ரசிகர்கள்  சிம்பு ரசிகர்கள் விழிபுணர்வு கொண்டாட்டம்

மரக்கன்று, மஞ்சப்பைகள் வழங்கி ரசிகர்கள் சிம்பு ரசிகர்கள் விழிபுணர்வு கொண்டாட்டம்

Tiruchirappalli | 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்திற்கு வந்தவர்களுக்கு, இனி 'நாடு வெந்து தணியக்கூடாது' என்பதற்காக மரக் கன்றுகளையும், மஞ்சப் பைகளையும் சிம்பு ரசிகர்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India
நடிகர் சிம்பு நடிப்பில், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் தமிழகம் முழுவதும் நேற்று வெளியானது. திருச்சியில் பாலக்கரை பகுதியில் உள்ள காவிரி தியேட்டரில் வெளியான திரைப்படத்தை சிம்பு ரசிகர்களும் பொதுமக்களும் பார்த்து ரசித்தனர்.

படம் பார்த்து வெளியே வந்தவர்களுக்கு, திருச்சி மாவட்ட தலைமை சிம்பு ரசிகர் மன்றத் தலைவர் அமீர் தலைமையிலான சிம்பு ரசிகர்கள், மரக்கன்றுகளையும் மஞ்சப்பைகளையும் வழங்கி சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Also see... சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு



'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்திற்கு வந்தவர்களுக்கு, இனி 'நாடு வெந்து தணியக்கூடாது' என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மரக் கன்றுகளையும், மஞ்சப் பைகளையும் வழங்கிய சிம்பு ரசிகர்களின் செயல், பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Plants, Simbu, Trichy

அடுத்த செய்தி