ஆடி மாதத்தில் ஆடி அமாவாசை, ஆடி18 (ஆடிப் பெருக்கு), கிராமங்களில் கோயில் திருவிழா என விசேஷங்கள் நிறைந்ததாக மாதம். ஆடி 18ஆம் தேதி மக்கள் ஆறு, குளம் போன்ற நீர் நிலைகள் நீராடி இறைவனை வணங்குவது வழக்கம். குறிப்பாக தமிழகத்தில் காவிரி ஆற்றை தெய்வமாக வணக்கி அதை வரவேற்று அதில் நீராடி வழிபடுவர்.
புதுவெள்ளமாக ஓடும் காவிரி ஆற்றில் நீராடி அம்மனை வணங்குவதால் காவிரியன்னை தன்னை வணங்கும் பெண்களுக்கு நல்ல கணவன் அமைய அருள்புரிவாள் என்றும், திருமணமான பெண்ணுக்கு கணவனின் நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுப்பாள் என்பது நம்பிக்கை.
இந்த தினத்தில் காவிரி படித்துறையில், மஞ்சள் பிள்ளையார் பிடித்து, விளக்கேற்றி, ஏதேனும் ஒரு நைவேத்தியம் படைத்து அம்மனுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வழிபாடு செய்து திருமணமான பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் தாலி மஞ்சள் சரடு மாற்றிக்கொள்ளும் வழக்கம் நிலவுகிறது. அதே போல் ஆண்கள் வலது கையில் காப்பு கட்டிக் கொள்வதும், கன்னிப்பெண்கள் மஞ்சள் கயிறை காப்பு போல கட்டிக் கொள்வது வழக்கமாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், நாளை புதன்கிழமை (3.8.22) ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி நீர்நிலைகளில் பொதுமக்கள் வழிபடுதல் மற்றும் நீராடும் இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
Must Read : காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய காட்டு யானை.. பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்
இந்நிகழ்வின் போது மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் நித்தியானந்தம், மற்றும் மாநகராட்சி, வருவாய்த்துறை, காவல்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aadi, Cauvery River, Cauvery water, Festival, Trichy