முகப்பு /செய்தி /திருச்சி / கைது செய்ய போன போலீசார்... வடிவேலு பட பாணியில் கதற கதற ஓடவிட்ட பெண்..! திருச்சியில் நடந்த சுவாரஸ்யம்..!

கைது செய்ய போன போலீசார்... வடிவேலு பட பாணியில் கதற கதற ஓடவிட்ட பெண்..! திருச்சியில் நடந்த சுவாரஸ்யம்..!

காவல்துறையினரை ஓடவிட்ட பெண்

காவல்துறையினரை ஓடவிட்ட பெண்

அப்போது வீட்டை பூட்டிக் கொண்ட பாலசுப்பிரமணியன், 'உங்களுடன் வரமாட்டேன். தனியாக தான் வருவேன்' என்று அடம் பிடித்துள்ளார்.

  • Last Updated :
  • Tiruchirappalli | Tiruchirappalli

திருச்சியில் விசாரணைக்காக அழைத்து செல்வதற்காக ஒருவரின் வீட்டிற்கு சென்ற போலீசாரை, அவரது மனைவி ஏன் கையை பிடித்து இழுத்தீர்கள் என கேட்டு ஓடவிட்டுள்ளார்.

நடிகர் சரத்குமாரின் கம்பீரம் திரைப்படத்தில் போலீசாக ரெய்டுக்கு சென்ற நடிகர் வடிவேலுவை பெண் ஒருவர் அலறவிட்டார். இந்த பட பாணியில் திருச்சியில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருச்சி உறையூர் கல்லறை மேட்டுத் தெருவை சேர்ந்த காளியம்மாள் (59) திருச்சி மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வுப் பெற்றார். கணவர் இறந்துவிட்ட நிலையில் 4 குழந்தைகளையும் தனி ஆளாக வளர்த்து வருகிறார்.

தான் வசித்து வந்த குடிசை வீட்டை கான்கீரீட் வீடாக மாற்றுவதற்கு காளியம்மாள் முடிவெடுத்தார். அதற்காக, திருச்சி உய்யக்கொண்டான் திருமலைப் பகுதியை சேர்ந்த கட்டிடப் பொறியாளர் பாலசுப்பிரமணியன் என்பவரை அணுகியுள்ளார். அவர் இரண்டு வீடுகளை முழுமையாக கட்டித் தருவதற்கு, 28 லட்ச ரூபாய் கேட்டுள்ளார். ஓய்வுப் பெற்ற போது கிடைத்த பணத்தை காளியம்மாள் அவரிடம் கொடுத்திருக்கிறார். அதன்பிறகு மேலும், 4 லட்ச ரூபாய் கேட்டுள்ளார். அதையும் கொடுத்துள்ளார்.

ஆனால் தற்போது, 'கட்டுமானப் பொருட்கள் விலை எல்லாம் ஏறிவிட்டது.  மேலும், 12 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் தான் வீட்டு வேலையை முழுமையாக முடிப்பேன்' என்று கூறி வேலையை பாதியில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

இதனால் வேதனையடைந்த காளியம்மாள் உறையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவுச் செய்த போலீசார், பொறியாளர் பாலசுப்பிரமணியன் வீட்டிற்கு சென்று அவரை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

அப்போது வீட்டை பூட்டிக் கொண்ட பாலசுப்பிரமணியன், 'உங்களுடன் வரமாட்டேன். தனியாக தான் வருவேன்' என்று அடம் பிடித்துள்ளார்.அதற்கும் ஒரு படி மேலே சென்ற அவரின் மனைவி லட்சுமி, 'நீங்கள் எப்படி விசாரணை என்ற பெயரில் எனது கையை பிடித்து இழுக்கலாம்' என்று கேட்டு போலீசாரை அதிரடித்துள்ளார்.

top videos

    இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், 'ஆளை விட்டால் போதும்' என்று அங்கிருந்து தலைதெறிக்க ஓடி வந்துள்ளனர்.நடிகர் வடிவேல் திரைப்பட பாணியிலான இந்த வீடியோ தற்போது போலீசார் வாட்ஸ் அப் குழுக்களில் வைரலாகி வருகிறது.

    First published:

    Tags: Crime News, Police investigation, Trichy