முகப்பு /செய்தி /திருச்சி / திருச்சி ரயில் நிலையத்தில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு..!

திருச்சி ரயில் நிலையத்தில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு..!

ரயில் நிலையத்தில் கிடந்த மர்மப்பெட்டி

ரயில் நிலையத்தில் கிடந்த மர்மப்பெட்டி

Trichy Railway Station | திருச்சி ரயில் நிலையத்தில் மர்ம பெட்டி ஒன்று நீண்ட நேரமாக ஒரே இடத்தில் கிடந்ததால் பயணிகள் அதிர்ச்சி

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி ரயில் நிலையத்திலிருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் தினம் தோறும் வேறு மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் பயணிக்கின்றனர். இதன் காரணமாக திருச்சி ரயில் நிலையத்தில் அடிக்கடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருச்சி ரயில் நிலையத்தில் மர்ம பெட்டி ஒன்று நீண்ட நேரமாக ஒரே இடத்தில் கிடப்பதாக பயணிகள் கூறிய நிலையில், திருச்சி ரயில் நிலைய நிலை மேலாளர் மற்றும் இருப்பு பாதை காவல்துறையினர் அந்த பெட்டியினை பரிசோதனை செய்தனர்.

அதன் பின்னர் அந்தப் பெட்டியில் ஒன்றும் இல்லை என தெரிந்த பின்பு பெட்டியினை அங்கிருந்து எடுத்துச் சென்றனர். மர்மமாக கிடந்த இந்த பெட்டியினால் திருச்சி ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

First published:

Tags: Local News, Trichy