திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள தோளூா்பட்டியைச் சோ்ந்தவா் கோபி. இவரது மகன் மெளலீஸ்வரன் (15) பாலசமுத்திரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்று படித்துக்கொண்டிருந்தபோது, சில மாணவா்கள் கற்களை வீசி விளையாடியுள்ளனர். மெளலீஸ்வரன்தான் கற்களை வீசியதாக எண்ணி அவரை சில மாணவா்கள் தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த மெளலீஸ்வரனை தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவர் மெளலீஸ்வரனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த மெளலீஸ்வரனின் உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு, திருச்சி- நாமக்கல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க : மின் இணைப்பு குறித்து சர்ச்சையான விவகாரம் : நோட்டீஸ் அனுப்பிய அதிகாரி சஸ்பெண்ட்!
இதையடுத்து, முசிறி டிஎஸ்பி யாஸ்மின் அறிவுறுத்தலின் பேரில் தொட்டியம் போலீஸார், மெளலீஸ்வரனை தாக்கியதாகக் கூறப்பட்ட 3 மாணவா்களை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். அஜாக்கிரதையாக செயல்பட்டதாக அப்பள்ளியின் தலைமையாசிரியா் ஈஸ்வரி, வகுப்பாசிரியா் ராஜேந்திரன், ஆசிரியா் வனிதா ஆகியோா் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். மேலும் இச்சம்பவம் தொடா்பாக மாவட்ட கல்வி அலுவலா் முத்துச்செல்வன் (லால்குடி) பள்ளி ஆசிரியா்களிடம் விசாரித்து வருகிறாா்.
செய்தியாளர் : கோவிந்தராஜ் (திருச்சி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: School student, Students killed, Trichy