முகப்பு /செய்தி /திருச்சி / நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியது... 3 பேர் பரிதாப பலி... திருச்சியில் பயங்கரம்..!

நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியது... 3 பேர் பரிதாப பலி... திருச்சியில் பயங்கரம்..!

விபத்துள்ளான கார்

விபத்துள்ளான கார்

நேற்று இரவு ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இன்று அதிகாலை இருவர் உயிரிழந்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலை கீதாபுரம் அருகே திருச்சி ராணித் தெருவை சேர்ந்த லட்சுமி நாராயணன் என்பவர் ஓட்டி வந்த கார் வேகமாக சென்றதால், கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் படுத்திருந்த யாசகர்கள் மீது ஏறி விபத்துக்குள்ளானது.

நேற்று இரவு நடந்த இந்த கோர சம்பவத்தில் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவர் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தனர். மூவரின் பெயர் மற்றும் விவரங்கள் இதுவரை தெரியாத சூழல் உள்ளது.

இந்த விபத்து குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் விபத்து ஏற்படுத்திய லட்சுமி நாராயணன் (வயது 23), அஸ்வந்த் (வயது 21) ஆகிய இரண்டு இளைஞர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

First published:

Tags: Accident, Trichy