முகப்பு /செய்தி /திருச்சி / தங்க நகையை பாலிஷ் செய்வதாக கூறி ஆசிட்டில் கரைத்த வடமாநில இளைஞர்... பதறிய பெண்கள் - நடந்தது என்ன?

தங்க நகையை பாலிஷ் செய்வதாக கூறி ஆசிட்டில் கரைத்த வடமாநில இளைஞர்... பதறிய பெண்கள் - நடந்தது என்ன?

மணப்பாறை

மணப்பாறை

Tiruchirappalli | மணப்பாறை அருகே நகைக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி தங்க நகையை ஆசிட்டில் கரைத்த பீகாரை சேர்ந்த இருவரை கைது செய்த மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

மணப்பாறை அடுத்த சமுத்திரம் காந்தி நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி ராணி சந்திரிகா. இவரது மகள் சந்திரகாந்தா வயது 24 இவர் நர்சிங் படித்து முடித்துவிட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று ராணி சந்திரிகா மற்றும் அவரது மகள் சந்திரகாந்தா இருவரும் வீட்டில் இருந்த போது வெளி மாநிலத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் இவர்களது வீட்டிற்கு வந்து நீங்கள் வைத்திருக்கும் வெள்ளி மற்றும் தங்க நகைகளுக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கேட்டுள்ளனர். ஆனால் தாய் மற்றும் மகள் இருவரும் மறுத்துள்ளனர். அதற்கு சந்திரகாந்தா அணிந்திருந்த வெள்ளி மோதிரத்தை பாலிஷ் போட்டு தருவதாக கூறியதால், அவர் அதை கழட்டி கொடுத்துள்ளார்.

முதலில் வெள்ளி மோதிரத்தை பாலிஷ் போட்டுக் கொடுத்தவுடன் உடனே அவர் கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் தங்கச் சங்கிலி கையில் அணிந்திருந்த ¾ கை செயின் என இரண்டையும் கழட்டி கொடுத்துள்ளார். இரண்டையும் பாலிஷ் போடுவதாக கூறி சற்று நேரத்தில் ஆசிடில் போட்டவுடன் கரைந்துள்ளது. உடனே தாயும் மகளும் சுதாரித்து எனது நகையை திருப்பிக் கொடு என்று கேட்டவுடன் கை செயின் ¾ பவுன் எடுத்து கொடுத்துள்ளார். கழுத்தில் இருந்த 1½ பவுன் செயின் சற்று நேரத்தில் முழுவதுமாக துண்டு துண்டாக ஆசிட்டில் கரைந்து விட்டது.

உடனே இதனை பார்த்த தாய் மற்றும் மகள் இருவரும் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்த ஊர் பொதுமக்கள் இருவரையும் பிடித்து விசாரித்தபோது இருவரும் பீகார் ரகுநாத்பூர் சுபல் பகுதியை சேர்ந்த ரகுநாதன் ராம் வயது 36  என்பது உடனிருந்த 14 வயது சிறுவன் இவரது அண்ணன் மகன் என்பது தெரியவந்தது

Also see...ஓடும் பேருந்தில் டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி..

தொடர்ந்து இருவரிடமும் சிறிது நேரம் விசாரணை செய்த பின் மணப்பாறை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் வந்த மணப்பாறை காவல்துறையினர் இருவரையும் விசாரணை செய்தபோது அதில் ரகுநாதன் ராம் என்பவருக்கு கையில் ரத்த காயம் இருப்பதை அறிந்து இருவரையும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் பற்றி மணப்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

top videos

    செய்தியாளர்: ராமன், மணப்பாறை

    First published:

    Tags: Arrested, Crime News, Gold Theft, Manaparai