திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள என்.ஐ.டி., தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இந்திய என்.ஐ.டி.,களில் முதலிடத்தை பெற்றுள்ளது. ஒட்டுமொத்த தரவரிசையை, 21 ஆக மேம்படுத்தியுள்ளது. இத்தகைய சிறப்புமிக்க என்.ஐ.டி.,யில், 18வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. கல்லூரி இயக்குனர் முனைவர் அகிலா தலைமை வகித்து, பட்டங்களை வழங்கினார்.
தலைமை விருந்தினராக பங்கேற்ற, என்.ஐ.டி., முன்னாள் மாணவரும், பெடரல் வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலரான ஷ்யாம் சீனிவாசன் பேசியபோது,
"வாழ்க்கை உங்களுக்கு சமத்துவத்துடன் சேவை செய்யாமல் போகலாம். ஆனால் நீங்கள் உங்கள் சமத்துவத்தை கட்டியெழுப்பினால், அது உங்களைப் பற்றியும், உங்களது பிராண்ட்டை பற்றிய உயர்வை வெளிப்படுத்தும்.
பிராண்ட் என்பது, பொருத்தம், நம்பகத்தன்மை, பேச்சுவார்த்தைகள், சவால்கள் மற்றும் விநியோகம் மீது பட்டதாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதாகும். இதற்கு, நான் (சீனிவாசன்), ஜெர்மி லால்ரின்னுங்கா, ஏபிஜே அப்துல் கலாம், சச்சின் டெண்டுல்கர் முதல், மும்பை டப்பாவாலாக்கள் போன்றவர்கள் எழுச்சியூட்டும் எடுத்துக்காட்டுகள்.
ஒருவரின் தோற்றம் ஒரு பொருட்டல்ல. ஆனால் ஒருவரின் குறிக்கோள்கள் அற்புதமான எதிர்காலங்களை நிர்ணயிக்கும்.
இளைஞர்கள் பயத்தை விட, கவனத்துடனும், உறுதியுடனும் தங்கள் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள வேண்டும்" என்றார். விழாவில், முன்னாள் மாணவர் சங்கத்தலைவர் பாஸ்கர் பட், இயக்குனர் அகிலா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
கொரானா பரவல் காரணமாக கடந்த, 2 ஆண்டுகளாக காணொலி காட்சி மூலமாகவே பட்டமளிப்பு விழா நடைபெற்றன. மேலும், என்.ஐ.டி., வரலாற்றில், 1,977 பேருக்கு ஒரே நேரத்தில் பட்டமளிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.