ஹோம் /நியூஸ் /திருச்சி /

திருச்சியில் நடுரோட்டில் பழுதாகி நின்ற 108 ஆம்புலன்ஸ்... மழையில் நனைந்தபடி தள்ளிய பெண் ஊழியர்!

திருச்சியில் நடுரோட்டில் பழுதாகி நின்ற 108 ஆம்புலன்ஸ்... மழையில் நனைந்தபடி தள்ளிய பெண் ஊழியர்!

நடுரோட்டில் ஆம்புலன்ஸை தள்ளிய பெண் ஊழியர்

நடுரோட்டில் ஆம்புலன்ஸை தள்ளிய பெண் ஊழியர்

Trichy District News | கனமழையால் யாரும் அவர்களுக்கு உதவி செய்யவில்லை. இதனால் ஊழியர்களே ஆம்புலன்ஸை தள்ளியபடியே அங்கிருந்து புறப்பட்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruchirappalli, India

  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால்  திருச்சியில்  இன்று அதிகாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால்  கன்டோன்மென்ட் சாலை,  உறையூர், பீமாநகர், கிராப்பட்டி, எடமலைப்பட்டி புத்தூர், தில்லை நகர், உள்ளிட்ட பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

  இதனால் சாலைகளின் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு மத்தியில் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

  இந்நிலையில், திருச்சி மன்னார்புரம் பகுதியில் மழை காரணமாக அரசு 108 ஆம்புலன்ஸ் ஒன்று  இயக்க முடியாமல் பாதியில் நின்றது. இதனால் அதில் இருந்த பெண் ஊழியர் மற்றும் ஆண் ஊழியர்கள் மழையில் நனைந்தபடியே ஆம்புலன்ஸை தள்ளி இயக்க முயற்சி செய்து வந்தனர்.

  இதையும் படிங்க : திருச்சியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிப்பு

  ஆனாலும் ஆம்புலன்ஸை இயக்க முடியவில்லை. மேலும் கனமழையால் யாரும் அவர்களுக்கு உதவி செய்யவில்லை. இதனால் ஊழியர்களே ஆம்புலன்ஸை தள்ளியபடியே அங்கிருந்து புறப்பட்டனர்.

  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “உயிரை காப்பாற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவை மழைக்காலங்களில் இதுபோன்று பழுது ஏற்பட்டால் விபத்தில் சிக்குபவர்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படும். மக்களின் உயிர்காக்கும் வாகனம் என்பதால்  அனைத்து மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை பழுது இல்லாமல் பராமரிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர்.

  செய்தியாளர் : கோவிந்தராஜ் - திருச்சி

  Published by:Karthi K
  First published:

  Tags: Ambulance, Local News, Trichy