மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் குரலில் மிமிக்ரி செய்த பொம்மை வியாபாரி கைது!

அரசியல் தலைவர்களைப் போல மிமிக்ரி செய்தாலும், அவர் நாகரீமான வார்த்தைகளையே பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

news18
Updated: June 2, 2019, 10:11 AM IST
மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் குரலில் மிமிக்ரி செய்த பொம்மை வியாபாரி கைது!
கைதான அவ்தேஷ் துபே
news18
Updated: June 2, 2019, 10:11 AM IST
ரயிலில் பிரதமர் மோடி, சோனியா காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களைப் போல பேசி வியாபாரம் செய்த பொம்மை வியாபாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியைச் சேர்ந்தவர் அவ்தேஷ் துபே. சிறு வயதிலேயே குஜராத் மாநிலத்துக்கு இடம்பெயர்ந்த அவர் ரயில்களை பொம்மைகளை விற்று வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், ஓடும் ரயில் ஒன்றில் அவ்தேஷ் துபே, பிரதமர் மோடி, ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரைப் போல பேசி வியாபாரம் செய்தார். இந்த வீடியோவானது சமீபத்தில் வைரலாக பரவியது.


இதனை அடுத்து, சூரத் ரயில்வே பாதுகாப்பு படையினரால் அவ்தேஷ் துபே திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். அரசியல் தலைவர்களைப் போல மிமிக்ரி செய்தாலும், அவர் நாகரீமான வார்த்தைகளையே பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.ரயிலில் பயணிகளுக்கு தொந்தரவு கொடுத்தல், அமைதியை குலைத்தல் மற்றும் சட்டவிரோதமாக ரயில் பெட்டிகளில் நுழைதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவ்தேஷ் துபே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

துபே கைது செய்யப்பட்ட விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது. 
First published: June 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...