மோடி என்ற தனிமனிதனின் வெற்றி... பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறேன் - ரஜினிகாந்த்

Vinothini Aandisamy | news18
Updated: May 28, 2019, 2:29 PM IST
மோடி என்ற தனிமனிதனின் வெற்றி... பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறேன் - ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
Vinothini Aandisamy | news18
Updated: May 28, 2019, 2:29 PM IST
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார்.

நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க மிகப்பெரும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது.

வரும் 30-ம் தேதி மாலை 7 மணிக்கு ராஷ்டிரபதி பவனில், பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமானமும் செய்துவைக்கிறார்.


இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.இந்த விழாவில் கலந்துகொள்ள அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவின் அருகில் அமைந்துள்ள இந்த 6 நாடுகளும் இந்தியாவும் இணைந்து பிம்ஸ்டெக் எனப்படும் வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.

மேலும் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மோடியின் அழைப்பை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.

Loading...

மோடியுடன் ரஜினிகாந்த்


இதுகுறித்து சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், “மோடி என்ற தனிமனிதனின் தலைமைக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. நேரு, இந்திராகாந்தி, வாஜ்பாய்க்கு பின் செல்வாக்கு பெற்ற தலைவராக மோடி விளங்குகிறார். தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை தமிழகத்தில் எதிர்க்கட்சிகளுக்கு வெற்றியை கொடுத்துள்ளது.

தமிழகத்தில் கணிசமான வாக்குகளைப் பெற்ற கமல்ஹாசனுக்கு எனது வாழ்த்துகள். தமிழகத்தில் பாஜக தோல்வியைத் தழுவிய பிறகும் காவிரி - கோதாவரி இணைப்பு குறித்த நிதின் கட்கரியின் அறிவிப்பு பாராட்டுக்குரியது. தேர்தல் தோல்வியால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்யக் கூடாது. 30-ம் தேதி நடைபெற இருக்கும் பதவியேற்பு விழாவில் நான் பங்கேற்கிறேன்” என்று கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க: 96 படத்தில் என் பாடலை ஏன் வைக்க வேண்டும்? - இளையராஜா

First published: May 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...