ரிப்பேரான ஹெலிகாப்டர்! இறங்கி வேலை பார்த்த ராகுல் காந்தி

ஹிமாச்சல் பிரேதசத்தில் பரப்புரை மேற்கொண்ட ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரில் சிறிய பழுது ஏற்பட்டுள்ளது

Web Desk | news18
Updated: May 11, 2019, 7:15 AM IST
ரிப்பேரான ஹெலிகாப்டர்! இறங்கி வேலை பார்த்த ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Web Desk | news18
Updated: May 11, 2019, 7:15 AM IST
ஹெலிகாப்டரில் ஏற்பட்ட பழுதை பாதுகாப்பு குழுவினருடன் சேர்ந்து தானும் சரி செய்யும் புகைப்படத்தை ராகுல் காந்தி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மக்களவை தேர்தலின் 6ம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஞாயிற்றுக்கிழமை (12-05-19) அன்று நடைபெற உள்ளது. ஹிமாச்சல் பிரேதசத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகளுக்கு அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஹிமாச்சல் பிரேதசத்தில் பரப்புரை மேற்கொள்ள சென்ற ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரில் சிறிய பழுது ஏற்பட்டுள்ளது. பாதுகபாப்பு குழுவினருடன் இணைந்து ராகுல் காந்தியும் அந்த பழுதை நீக்கி உள்ளார்.

 

Loading...

View this post on Instagram
 

Good teamwork means all hands to the deck! We had a problem with our helicopter in Una, HP today, that working together we quickly fixed. Nothing serious thankfully. #Helicopter #Teamwork #Himachal #ElectionCampaign #Election #Indiannationalcongress


A post shared by Rahul Gandhi (@rahulgandhi) on


அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "சிறிய பழுதுதான். அனைவரும் கூட்டாக இணைந்து முயற்சித்ததால் விரைவாக பழுது சரிசெய்யப்பட்டது. பயப்படும் அளவிற்கு எந்தவித சிக்கலும் ஏற்படவில்லை'' என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். ராகுலின் இந்த பதிவிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read:

First published: May 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...