வாழைப்பழம் மட்டுமல்ல இந்த பழங்களும் அழியக் கூடும் அபாயத்தில் உள்ளன..!

வாழைப்பழத்தை எதிர்காலச் சந்ததிகள் மியூசியத்தில் காணக் கூடும்

Sivaranjani E | news18
Updated: May 17, 2019, 3:03 PM IST
வாழைப்பழம் மட்டுமல்ல இந்த பழங்களும் அழியக் கூடும் அபாயத்தில் உள்ளன..!
வாழைப்பழம்
Sivaranjani E | news18
Updated: May 17, 2019, 3:03 PM IST
வாழைப்பழம் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் கிடைக்கக் கூடிய பழம். வயிறு நிறைய உணவு உண்ட பின் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிடவில்லை என்றால் அந்த உணவு முழுமைப் பெறாது. குறிப்பாக இந்தியக் கலாச்சாரத்தின் படி விருந்து, பந்தியில் வாழைப்பழம்தான் முதலிடம் பிடிக்கும்.

இப்படி ஒன்றிப்போன வாழைப்பழங்களை இனி காணவே முடியாது என்றால் எப்படி இருக்கும் ? அதுவும் நமக்குப் பின் வரப்போகும் சந்ததிகள் வாழைப்பழம் என்றால் என்ன என்றும் அதை மியூசியத்தில் மட்டுமே காணக் கூடிய அரிய வகைப்பழமாகவும் மாறினால் எப்படி இருக்கும்.
ஆம், அந்த அதிர்ச்சிதான் எங்களுக்கும் அந்த செய்தியைப் படித்தபோது...

எக்ஸடர் என்னும் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் வாழைப்பழங்கள் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகக் கண்டுபிடித்துள்ளது.

அந்த ஆய்வில் வாழை மரங்களைக் குறி வைத்துத் தாக்கக் கூடிய பிளாக் சிகடோகா ( Black Sigatoka ) என்னும் கிருமி பருவ மாற்றத்தால் அதிகரித்து வருவதாகவும், இதனால் பயிரிடப்படும் வாழை மரங்கள் வளர்வதற்கு முன்னரே அழிந்துவிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதனால் வாழைத் தோப்புகள், வாழைப் பழங்களின் வரத்து என அனைத்தும் அழிந்து வருகின்றன என்று எச்சரித்துள்ளது.

Loading...

இந்த உலக வெப்ப மயமாதலால் வாழைப்பழங்கள் மட்டுமல்ல இன்னும் பல பழங்கள் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.அவகோடா : அவகோடா பழங்கள் சமீப வருடங்களாகத்தான் புழக்கத்தில் அதிகரித்துள்ளன. கலிஃபோர்னியாவில் பயிரிடப்படும் இந்தப் பழங்களுக்கு 34 லிட்டர் தண்ணீர் ஒரு அவுன்ஸிற்குத் தேவைப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயிகள் பலரும் அவகோடாவை உற்பத்தி செய்வதை நிறுத்தியுள்ளனர். இதனால் இந்த பழங்களின் வரத்தும் குறைந்து வருகிறது.சாக்லெட் : தரவுகளின் படி கோக்கோ வளர்ப்புக்கு 20 டிகிரி வெப்பம்தான் போதுமானது. ஆனால் பருவ நிலை மாற்றம் , நிலையில்லாத் தன்மை போன்ற காரணங்களால் விவசாயிகள் பயிரிடச் சிரமப்படுகின்றனர். இதனால் சாக்லெட் உற்பத்தியும் விரைவில் குறையும் என்று கூறப்படுகிறது.சோயாபீன்ஸ் : 2100 ஆண்டில் சோயாபீன்ஸின் உற்பத்தி 40சதவீதமாகக் குறைந்துவிடும் ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். நேச்சர் கிளைமேட் சேஞ்ச் 2016 ஆண்டு வெளியிட்ட ஆய்வில் கோதுமை, அரிசி, சோளம் போன்றவை கணிக்க முடியாத பருவ நிலை மாற்றம், உலக வெப்பமாதல் போன்ற காரணங்களால் அழிந்து போகும் அல்லது உற்பத்திக் குறையும் என எச்சரித்துள்ளது.காஃபி : 2017 ஆம் ஆண்டு நேஷன்ல் அகாடமி ஆஃப் சைன்ஸ் டெமான்ஸ்ட்ரெஷன் வெளியிட்ட ஆய்வின்படி பருவ நிலை மாற்றத்தால் காஃபி பீன் உற்பத்தி 20 முதல் 25 சதவீதம் குறைந்து வருவதாகக் கூறியுள்ளது.

இதையும் படிக்க :

மாம்பழப் பிரியர்கள் கவனத்திற்கு : பழத்தை அரியும் முன் இந்த தகவலைத் தெரிந்துகொள்ளுங்கள்...!

இளநீரை தினமும் குடிப்பதால் ஆபத்தா?
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...