Video | அழையா விருந்தாளியாக வீட்டுக்கு வந்து காலிங் பெல் அடிக்க முயன்ற முதலை!

சில நிமிடங்கள் எடுத்த முதலையின் முயற்சி வெற்றி பெறாததால், அங்கேயே படுத்திருந்து சில நிமிடங்கள் கழித்து சென்றுவிட்டது. எனினும், எதையும் முதலை சேதப்படுத்தவில்லை.

Lingam A S | news18
Updated: May 7, 2019, 8:12 PM IST
Video | அழையா விருந்தாளியாக வீட்டுக்கு வந்து காலிங் பெல் அடிக்க முயன்ற முதலை!
முதலை
Lingam A S | news18
Updated: May 7, 2019, 8:12 PM IST
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் முதலை ஒன்று வீட்டின் காலிங் பெல்லை அடிக்க முயன்ற வீடியோ வைரலாக பரவி வருகின்றது.

அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதிகளில் முதலைகள் பொது இடங்களில் உலவுவது வெகு சாதாரணமாக நடக்கிறது.

சமீபத்தில் கோல்ஃப் விளையாட்டு மைதானம் ஒன்றில் பெரிய அளவிலான முதலை படுத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையில், மிர்டில் கடற்கரையை ஒட்டிய பகுதியில் உள்ள கரென் அப்பேனா என்பவரது வீட்டுக்கு, அழையா விருந்தாளியாக வந்த 6.5 அடி நீள முதலையானது காலிங் பெல்லை அடிக்க முயன்றது.

சில நிமிடங்கள் எடுத்த முதலையின் முயற்சி வெற்றி பெறாததால், அங்கேயே படுத்திருந்து சில நிமிடங்கள் கழித்து சென்றுவிட்டது. எனினும், எதையும் முதலை சேதப்படுத்தவில்லை.

முதலையின் சேட்டையை பக்கத்து வீட்டுக்காரர், வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

Loading...

First published: May 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...