ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கே இந்த நிலைமையா? மெட்டா வேதனை

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கே இந்த நிலைமையா? மெட்டா வேதனை

மார்க் ஜுக்கர்பெர்க்

மார்க் ஜுக்கர்பெர்க்

மார்க் ஜூக்கர்பெர்க்கின் கணக்கு ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், அவருடைய கணக்கு வலைத்தளத்திலும் செயலியிலும் காணப்படுகிறது,

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சமூக வலைத்தளங்கள் ஒருவரை ஒரே நாளில் ஒருவரை உச்சத்திற்கு கொண்டு சென்று விடும்; அதேபோல ஒரே நாளிலேயே ஒருவரை வீழ்த்தி விடும் சக்தியும் கொண்டது. சமூகவலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்களுக்கு எக்கச்சக்கமான ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். ஃபாலோயர்களின் எண்ணிக்கையை வைத்து ஒரு நபர் எவ்வளவு பிரபலம் என்பதைக் கூறலாம். ஆனால், திடீரென்று நேற்று ஃபேஸ்புக்கில் ஃபாலோயர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்பது பற்றிய செய்திகள் காட்டுத்தீயாய் பரவியது! இதை பற்றி செய்திகள் பலரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும் பொழுதே ஃபேஸ்புக்கின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க்குக்கே அந்த நிலைமைதான் என்பதும் உறுதி செய்யப்பட்டது. அப்படி என்ன நடந்தது?

அதிரடியான பல மாற்றங்கள், தொழில்நுட்ப ரீதியான மாற்றங்கள், புதுப்பிப்புங்கள் என்று சமூக வலைத்தளங்களில் பலவிதமான மேம்பாடுகளை செய்யப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் பலரும் எதிர்பார்க்காத அளவுக்கு அதிர்ச்சியான செய்திகளும் வெளிவருகின்றன. நேற்று சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்ட தலைப்பு பாலோயர்கள் குறைந்தது தான். ஃபேஸ்புக் நிறுவனரான, தலைமை செயல் அதிகாரியான மார்க்குக்கே கோடிக்கணக்கான பாலோயர்கள் குறைந்துள்ளன என்ற செய்தி ஃபேஸ்புக் முழுவதுமே வைரலாக பகிரப்பட்டு பேசப்பட்டு வந்தது.

ஃபேஸ்புக் யூசர்கள் கணிசமான எண்ணிக்கையில் ஃபாலோயர்களை இழந்துள்ளார்கள் என்பது மட்டுமல்லாமல், மார்க் ஜூக்கர்பெர்க் 10 கோடிக்கும் மேல் ஃபாலோயர்களை இழந்துள்ளார் என்ற தகவலும் உறுதியானது. துல்லியமாக கூற வேண்டுமானால், மார்க் ஜுக்கர்பெர்க் 11.9 கோடி ஃபாலோயர்களை இழந்துள்ளார்.

ஃபேஸ்புக் தரப்பில் இதைப்பற்றி என்ன கூறினார்கள்?

ஃபேஸ்புக் சார்பாக செய்தியாளர்களுக்கு இதைப் பற்றி கூறிய நபர், “ஃபேஸ்புக் யூசர்களின் ஃபாலோயர்களின் எண்ணிக்கை எண்ணிக்கை மாறி மாறி வருகிறது என்பதை பற்றி நாங்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறோம். நாங்கள் சரி செய்யும் வேலையில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். இதனால் ஏற்பட்ட அசௌகரியத்துக்கு வருந்துகிறோம்” என்று வருத்தம் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார்.

Also Read : பூமியில் மட்டுமில்லை செவ்வாய் கிரகத்திலும் இந்தப்பிரச்னை நடந்திருக்காம்..!

ஆனால் இவ்வாறு ஃபாலோயவர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு என்ன காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. அவ்வபோது தொழில்நுட்ப கோளாறினால் ஏற்படக்கூடிய ஏதேனும் ஒரு பிரச்சினை, வைரஸ் அல்லது பக் காரணமாக இவ்வாறு நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் இந்த பிரச்சனை இருக்கிறது என்பதை உறுதி செய்ததோடு மட்டுமல்லாமல் இதற்குக் காரணம் பக் அல்ல என்பதையும் வெளிப்படையாக அறிவித்துள்ளது.

_Facebook customer care
ஃபேஸ்புக் வாடிக்கையாளர் சேவை

மார்க் ஜூக்கர்பெர்க்கின் கணக்கு ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், அவருடைய கணக்கு வலைத்தளத்திலும் செயலியிலும் காணப்படுகிறது, ஹேக் செய்யப்பட்டதற்கான எந்தவித அறிகுறிகளும் இல்லை என்றும் கூறியிருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல், சில நேரங்களில் ஏதாவது சைபர் தாக்குதலாக இருக்கலாம் அல்லது மெட்டா நிறுவனம் பாட்களை பயன்படுத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த பிரச்சனை ஒரு பக்கம் இருக்கையில், சில நாட்களுக்கு முன்பே ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் 10 லட்சம் யூசர்களின் லாகின் விவரங்கள் ஒருசில செயலிகளால் பெறப்பட்டு இருக்கிறது என்ற எச்சரிக்கை அறிவிப்பையும் வெளியிட்டது, என்பதை நாம் தற்போது நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். கூகுள் பிளே மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோரில் இருக்கும் ஒரு சில செயலிகள் ஃபேஸ்புக் லாகின் செய்வதன் மூலம் யூசர்களின் லாகின் விவரங்களைப் பெற்று முறைகேடாக பயன்படுத்தும் ஆபத்து இருப்பதாக வெளியான எச்சரிக்கையின் விளைவாக கூட ஃபாலோயர்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது.

Published by:Vijay R
First published:

Tags: Facebook, Mark zuckerberg