Home /News /trend /

Zomato-வின் இன்டர்-சிட்டி சேவையை பயன்படுத்தி ஹைதராபாத் பிரியாணி ஆர்டர் செய்த நபர் - ஆனால் கிடைத்ததோ.!

Zomato-வின் இன்டர்-சிட்டி சேவையை பயன்படுத்தி ஹைதராபாத் பிரியாணி ஆர்டர் செய்த நபர் - ஆனால் கிடைத்ததோ.!

சொமேட்டோ

சொமேட்டோ

Zomato Intercity Legends | பிரபல ஃபுட் டெலிவரி நிறுவனமான Zomato சமீபத்தில் இன்டர்சிட்டி மீல் டெலிவரி சர்விசை பயன்படுத்தி தனக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்தவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் தொடர்பான ட்விட் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Hyderabad, India
இன்று சகலமும் ஆன்லைனில் கிடைப்பதால் நினைத்த நேரத்தில் இருக்கும் இடத்திலேயே ஆர்டர் செய்வது என்பது வாழ்க்கையை மிகவும் ஈசியாக்கி விட்டது. குறிப்பாக ஃபுட் டெலிவரி ஆப்ஸ்களை பயன்படுத்தி பிடித்த அல்லது சாப்பிட நினைக்கும் உணவுகளை ஆர்டர் செய்வது இயல்பான ஒன்றாகிவிட்டது.

இதனிடையே பிரபல ஃபுட் டெலிவரி நிறுவனமான Zomato சமீபத்தில் இன்டர்சிட்டி மீல் டெலிவரி சர்விஸ் (intercity meal delivery service) என்ற புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய சர்விசை பயன்படுத்தி தனக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்தவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் தொடர்பான ட்விட் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளும் முன் முதலில் Zomato நிறுவனத்தின் இன்டர்சிட்டி ஃபுட் டெலிவரி அம்சம் என்றால் என்ன என்பதை பார்த்து விடுவோம். Intercity Legend என்ற பெயரில் துவக்கப்பட்டுள்ள இந்த அம்சம் மற்ற நகரங்களில் வசிக்கும் ஒரு வாடிக்கையாளர் தான் விரும்பும் வேறு ஒரு ஸ்பெஷல் சிட்டி உணவை ஆர்டர் செய்ய அனுமதிக்கிறது. உதாரணமாக டெல்லியில் வசிக்கும் ஒரு யூஸர், பிரபலமாக உள்ள வேறு ஒரு சிட்டியின் ஸ்பெஷல் உணவை சாப்பிட நினைத்தால் அதை Zomato ஆப் மூலம் ஆர்டர் செய்யலாம். ஆர்டரின் பேரில் ஃபிரெஷ்ஷான உணவு எளிதில் சேதமடையாத பேக்கிங்கில் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு பின் உரிய நபருக்கு டெலிவரி செய்யப்படும்.

Also Read : பெண்ணில் காதில் புகுந்த பாம்பு... வெளியே எடுக்க போராடும் மருத்துவர் - ஷாக் வீடியோ

வாடிக்கையாளர்கள் இப்போது பிற நகரங்களில் உள்ள புகழ் பெற்ற உணவகங்களில் இருந்து மிகவும் பிரபலமான உணவுகளை ஆர்டர் செய்ய உதவும் Zomato-வின் இந்த வித்தியாசமான இன்டர்-சிட்டி சர்விசை பயன்படுத்தி சமீபத்தில் குருகிராமில் வசிக்கும் பிரதீக் கன்வால், ஹைதராபாத்தில் உள்ள பிரபல உணவகம் ஒன்றிலிருந்து சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்து உள்ளார். இவர் Zomato-வின் ஸ்டாக் ஹோல்டரும் கூட. ஹைதராபாத் பிரியாணியை ருசிக்கும் ஆசையில் ஆவலுடன் காத்திருந்த இவருக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.ஏனென்றால் பிரியாணிக்கு பதிலாக ஒரு சிறிய பாக்ஸ் salan மட்டுமே டெலிவரி கொடுக்கப்பட்டது. salan என்பது ஹைதராபாத் பிரியாணிக்கு கொடுக்கப்படும் ஒருவகை காரமான சைடிஷ் ஆகும். இதனால் கடும் ஏமாற்றமடைந்த பிரதீக் இந்த நிகழ்வைப் பற்றி ட்வீட் செய்தார். அதில் " Zomato ஸ்டாக் ஹோல்டர் மற்றும் ஒரு வாடிக்கையாளர் என்ற வகையில் தனக்கு "இரட்டை இழப்பு" ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் Zomato-வின் தலைமை நிர்வாக அதிகாரியை டேக் செய்து உரிய நடவடிக்கை எடுக்கு கேட்டு கொண்டார்.

Also Read : நீரில் மூழ்கிய நாயை காப்பாற்ற போன நபருக்கு நேர்ந்த பரிதாப சம்பவம்.!

ட்விட்டுடன் தனக்கு கிடைத்த salan பேக்கின் படத்தையும் பதிவிட்டு இன்டர்சிட்டி டெலிவரி சர்வீஸ் அம்சத்தை ஆராயுமாறு Zomato-வின் CEO தீபிந்தர் கோயலை வலியுறுத்தி இருக்கிறார். இதனை தொடர்ந்து சுதாரித்த Zomato நிறுவனம் பிரதீக் கன்வாலின் பிரியாணி எங்கு இருக்கிறது என்பதை கண்டறிந்து அவருக்கு கொண்டு போய் சேர்த்தது மட்டுமல்லாமல் கூடுதல் பிரியாணியையும் வழங்கியது. சிக்கல் தீர்க்கப்பட்டதையும் ட்விட்டரில் ஷேர் செய்தார் பிரதீக்.மேலும் குறைந்தப்பட்சம் ஒரு பங்குதாரராக நான் வாடிக்கையாளர் சேவையைப் பற்றி நன்றாக உணர்கிறேன் என்று இறுதியாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
Published by:Selvi M
First published:

Tags: Biryani, Zomato

அடுத்த செய்தி