Home /News /trend /

ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவு பில் அதிகமாக இருப்பது ஏன்? Zomato விளக்கம்

ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவு பில் அதிகமாக இருப்பது ஏன்? Zomato விளக்கம்

வைரலாகும் புகைப்படம்

வைரலாகும் புகைப்படம்

ஆன்லைனில் வாங்கும் உணவின் விலை பற்றி, சமீபத்தில் வெளியான செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    புதுடெல்லியில் கடந்த சில வருடங்களாகவே பல ஆன்லைன் டெலிவரி ஆப்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மக்கள் ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்யும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. ஒரு பட்டனை கிளிக் செய்தால் போதும், நீங்கள் விரும்பிய உணவு அதுவும் உங்களுக்குப் பிடித்த உணவகத்திலிருந்து சில நிமிடங்களில் உங்கள் வீட்டின் வாசலில் கிடைக்கும் என்றால் யார் வேண்டாம் என்று சொல்வோம்.

    சொமோட்டோ வாடிக்கையாளர் ஒருவர் உணவகத்திலும், ஆன்லைனிலும் வாங்கும் உணவின் கட்டணங்களுக்கு இடையிலுள்ள வேறுபாட்டைப் பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவு மக்கிளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் கப்ரா என்ற நபர் சொமோட்டோ மூலம் உணவுகளை வாங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார். பொதுவாக உணவு டெலிவரி ஆப்ஸ்களில் காட்டும் விலை என்பது நாம் ஆர்டர் செய்த உணவின் விலையோடு கூடுதல் வரி சேர்த்து காட்டும். ஆனால் உணவின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது.

    சில ஆப்களில் இந்த விலையில் சில மாற்றம் இருக்கலாம். ஆனால் சொமோட்டோ ஆப்ஸ்களில் ஆர்டர் செய்த இவர், தான் ஆர்டர் செய்த உணவின் விலையில் அதிகமான அளவு விலை வித்தியாசம் உள்ளதாக கூறியுள்ளார். சொமோட்டோவில் இவர் வெஜ் ப்ளாக் பெப்பர் சாஸ், வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ் மற்றும் காளான் மோமோ போன்ற உணவை ஆர்டர் செய்ததாகவும் அதன் விலை ₹689 எனவும் கூறியுள்ளார்.

    Also Read : ஓனரை கட்டிப்பிடித்து கதறி கதறி அழுத ஆடு... கல்லான மனதையும் கலங்க வைக்கும் வீடியோ

    இது குறித்த புகைப்படத்தையும் இவர் வெளியிட்டுள்ளார். இதே உணவை, தான் கடைக்கு நேரில் சென்று வாங்கிய போது அதே உணவின் விலை ₹512 மட்டுமே என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தற்போது இந்த செய்தியை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதோடு தான் வாங்கிய உணவு ஆர்டர் பில்களின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.



    அதில் தான் வாங்கிய ஆஃப்லைன் ஆர்டருக்கான கட்டணம் ₹512 என்றும் சொமோட்டோ ஆர்டருக்கான விலை ₹690 அதுவும் ₹75 தள்ளுபடிக்கு பின் இந்த விலை என்றும் கூறியுள்ளார். மொத்தம் 690-512= ₹178 அதிகம். ஆதலால் அனைவரும் ஆன்லைனில் ஆர்டர் செய்வதை குறைத்து கொண்டு, நேரில் சென்று உணவு வாங்கும் பழக்கத்தை கொண்டுவர வேண்டும் என்றும் அவர் பதிவில் கூறியுள்ளார்.

    மக்கள் ஆன்லைனில் வாங்கும் உணவுகளின் விலை உயர்வை அறிந்த பிறகு, சொமோட்டோவிலிருந்து ஆர்டர் செய்வதை நிறுத்திவிடுவார்கள், இல்லையானால் பிற ஆப்ஸ்களுக்கு மாறுவார்கள், என்று ராகுல் கப்ரா, சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ள இந்த பதிவை தற்போது 11,000க்கும் மேற்பட்டவர்கள் ஷேர் செய்துள்ளனர். மேலும் 1,700க்கும் அதிகமானோர் கமெண்ட்ஸ் செய்தும் வருகின்றனர்.

    திரு கப்ராவின் இந்த செய்திக்கு பதிலளித்த சொமோட்டோ, நாங்கள் உங்கள் கருத்தை உணவகத்திற்கு தெரிவித்துள்ளோம் என கூறியுள்ளனர். உணவக நிர்வாகிகள் உணவுகளின் விலையை நிர்ணயம் செய்கிறார்கள் என்று சொமோட்டோ நிர்வாகம் தெளிவுப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி