முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / கைக்குழந்தையுடன் உணவு டெலிவரி செய்யும் தந்தை.. இணையத்தை வென்ற வீடியோ!

கைக்குழந்தையுடன் உணவு டெலிவரி செய்யும் தந்தை.. இணையத்தை வென்ற வீடியோ!

சொமேட்டோ டெலிவரி ஊழியர்.

சொமேட்டோ டெலிவரி ஊழியர்.

சோஷியல் மீடியாவில் இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.

  • Last Updated :
  • Delhi, India

தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் போதுமான பொருளாதார ஆதரவை பெறுவதற்காக உணவு டெலிவரி செய்பவர்கள் படும் கஷ்டங்கள் சமீப காலங்களாக சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன.

அந்த வகையில் பிரபல ஃபுட் டெலிவரி நிறுவனமான (Zomato) சொமேட்டோ -வில் ஃபுட் டெலிவரி ஏஜென்ட்டாக பணிபுரியும் ஒருவரின் வீடியோ ஆன்லைனில் வைரலாகி நெட்டிசன்களின் இதயத்தை உருக்கி வருகிறது.

அந்த வைரல் வீடியோவில் சொமேட்டோவில் வேலை பார்க்கும் ஒரு டெலிவரி ஏஜென்ட், தான் ஆர்டரை டெலிவரி செய்ய போகும் ஒவ்வொரு இடங்களுக்கும் கூடவே தன்னுடைய குறுநடை போடும் மகள் மற்றும் சிறிய வயது மகனை கூட்டி செல்வதை பார்க்க முடிகிறது. இதில் அவரது மகள் ஒரு கைக்குழந்தை என்பதால் தன் நெஞ்சோடு சேர்த்து அக்குழந்தையை கட்டி கொண்டுள்ளார்.

பிரபல ஃபுட் பிளாகரான சவுரப் பஞ்வானி சமீபத்தில் தனது இன்ஸ்டாவில், "இதை பார்க்கும் போது நான் மிகவும் உற்சாகமாக உணர்ந்தேன். இந்த சொமேட்டோ டெலிவரி பார்ட்னர் தனது 2 குழந்தைகளுடன் நாள் முழுவதும் வெயிலில் நேரத்தை செலவிடுகிறார், ஒருவர் விரும்பினால், அவரால் எதையும் செய்ய முடியும் என்பதை நாம் இதன் மூலம் கற்று கொள்ள வேண்டும்" என்று கேப்ஷன் கொடுத்து இந்த வீடியோவை ஷேர் செய்து உள்ளார்.

சவுரப் பஞ்வானியின் கேள்விக்கு பதில் அளித்த குறிப்பிட்ட அந்த ஃபுட் டெலிவரி ஏஜென்ட், "வேலை நேரத்தில் தனது மகனையும், கைக்குழந்தையான தனது மகளையும் கூடவே கூட்டி செல்வதாக கூறி இருக்கிறார்.

சோஷியல் மீடியாவில் பஞ்வானி ஷேர் செய்த சில மணிநேரங்களில் இந்த வீடியோ படு வைரலானது. எந்த அளவிற்கு இந்த வீடியோ வைரலானது என்றால், உணவு டெலிவரி ஆப்பான சொமேட்டோ கமெண்ட்ஸ் செக்ஷனில் பஞ்வான்யிடம்  குறிப்பிட்ட அந்த ஃபுட் டெலிவரி ஏஜென்ட்டின் தொடர்பு விவரங்களை கொடுக்க முடியுமா என கேட்டு உள்ளது.

"தயவுசெய்து ஒரு தனிப்பட்ட செய்தியில் ஆர்டர் விவரங்களைப் பகிரவும், இதனால் நாங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து வேலையை சிறப்பாக செய்யும் குறிப்பிட்ட டெலிவரி பார்ட்னரை அணுகி உதவ முடியும்" என்று அந் நிறுவனம் பஞ்வானியிடம் கேட்டு கொண்டுள்ளது.


இதற்கிடையே வீடியோ வைரலானதை தொடர்ந்து பல நெட்டிசன்கள் அந்த ஃபுட் டெலிவரி ஏஜென்ட்டின் கடமை உணர்ச்சியை பாராட்டினர். அதே சமயம் அவரது சூழ்நிலையை நினைத்து வருந்தினர்.

ஒருவர் குறிப்பிடுகையில் "கடினமான உழைப்பை தரும் அதே நேரம் இவரது நிலையை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது" என குறிப்பிட்டார். மற்றொருவர் "உங்கள் குடும்பத்திற்காக கடினமாக உழைக்கும் உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது. அதே நேரம் குழந்தைகளுடன் நீங்கள் வேலை செய்யும் போது கவனமாக இருங்கள் மற்றும் பாதுகாப்பாக இருங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

top videos

    மற்றொருவர் "அப்பா தான் ரியல் ஹீரோ" என்று கருத்து தெரிவித்து உள்ளார். மற்றொருவர் "எனக்கு இந்த மாதிரியான மனிதர்கள் மீது தனி மரியாதை உண்டு, தங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கும் வகையில் பணிகளில் அர்ப்பணிப்பு தன்மையுடன் இருக்கிறார் இவர்." என பாராட்டு தெரிவித்து உள்ளார்.

    First published:

    Tags: Viral Video, Zomato