முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / சாட் ஜிபிடி தவறிவிட்டது.. பங்கமாய் கலாய்த்த சொமேட்டோ.. இணையத்தில் டிரெண்டிங்..!

சாட் ஜிபிடி தவறிவிட்டது.. பங்கமாய் கலாய்த்த சொமேட்டோ.. இணையத்தில் டிரெண்டிங்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சாட்ஜிபிடி எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்தாலும் கூட, “நான் என்ன சாப்பிட வேண்டும்?’’ என்ற கேள்விக்கு பதில் அளிக்கத் தவறிவிட்டது என்று சொமேட்டோ நிறுவனம் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் செயல்பட்டு வரும் ஓப்பன்ஏஐ என்ற ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் நிறுவனம் சார்பில் சாட் ஜிபிடி என்ற சாட்பாட்டை உருவாக்கியுள்ளது.  அதாவது  சாட் ஜிபிடி என்பது செயற்கை நுண்ணறிவு ஆகும். மக்கள் அவரவர் உள்ளூர் மொழிகளில் கேட்கும் பல கேள்விகளை உள்வாங்கிக் கொண்டு, அதற்கு தகுந்த பதிலை சொல்லும் திறன் கொண்டது. 

ஆனால், சாட்ஜிபிடி எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்தாலும் கூட, “நான் என்ன சாப்பிட வேண்டும்?’’ என்ற கேள்விக்கு பதில் அளிக்கத் தவறிவிட்டது என்று சொமேட்டோ நிறுவனம் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளது. டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பதிவு டிரெண்டிங் ஆகியுள்ளது.

பொதுவாக ரெஸ்டாரண்ட் அல்லது ஹோட்டல்களுக்கு செல்லும்போது, ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும்போது, என்ன சாப்பிடலாம் என்பதை முடிவு செய்ய இயலாமல் மக்கள் திணறுவார்கள். அதுவும் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் கூட்டாக இணைந்து சாப்பிட சென்றால், எதை ஆர்டர் செய்யலாம் என்பது குறித்து நீண்ட விவாதமே நடக்கும்.

Read More : காதலர் தின கொண்டாட்டம்..! 9.5 கோடி ஆணுறைகளை இலவசமாக வழங்க அரசு திட்டம்..!

சாப்பிடுவதற்கு கண் முன்னே வகை, வகையாக உணவுகள் இருக்கும்போது எதை தேர்வு செய்வது, எது சுவையாக இருக்கும் என்பதை முடிவு செய்ய நம் மனம் தடுமாறும். உறுதியான முடிவெடுக்க முடியாமல் நம் மனமே தடுமாறும் கேள்விக்கு ஒரு சாட்பாட் பதில் அளிக்க இயலாது என்ற ரீதியில் தான் சொமேட்டோ நிறுவனம் கிண்டலடித்துள்ளது.

நாங்களும் கேட்போம்

சொமேட்டோவின் நகைச்சுவை அணுகுமுறை டிவிட்டர் யூசர்கள், நிறுவனங்கள் என பல தரப்பினரையும் ஈர்த்துவிட்ட நிலையில், பலரும் அதே பாணியில் பதிவிட்டனர். வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்புடைய நிறுவனமான ஸ்டாக் க்ரோ வெளியிட்டுள்ள பதிவில், “எந்த பங்குகளில் நான் முதலீடு செய்யலாம்? என்ற கேள்விக்கு சாட்ஜிபிடி பதில் அளிக்க தவறிவிட்டது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையெல்லாம் விட தனிநபர் ஒருவர் தன்னுடைய புகைப்படங்கள் பலவற்றை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டதுடன், இதில் எது சிறந்த படம் என்பதை தேர்வு செய்யும் போட்டியில் சாட்ஜிபிடி தோற்றுவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். இவரைப் போல மேலும் பல நபர்கள் தங்களின் தனிப்பட்ட கேள்விகளுக்கு சாட்ஜிபிடி பதில் அளிக்கத் தவறி விட்டதாக தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, சாட்ஜிபிடி கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தொடங்கிய ஒரு வாரத்திற்குள்ளேயே ஒரு மில்லியனுக்கும் அதிகமான யூசர்களை பெற்று இணைய உலகில் புயலை கிளப்பி வருகிறது. நாம் சாதாரணமாக மேற்கொள்கின்ற உரையாடல் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சாஃப்டுவேரில், யூசர்கள் உள்ளூர் மொழிகளில் கேள்விகளை எழுப்பி பதில் பெறலாம். தனிமையில் இருப்பவர்கள், நட்பு வட்டம் பெரிய அளவில் இல்லாதவர்களுக்கு இந்த சாட்பாட் ஒரு ஆன்லைன் நண்பனை போல வேலை செய்யும்.


First published:

Tags: Technology, Trending, Viral