Home » News » Trend » ZOMATO DELIVERY GUY SMILE GOES VIRAL COMPANY MAKES HIM THE FACE OF ITS TWITTER SKV

ஒரே ஒரு சிரிப்பு தான்...! இணையம் முழுக்க வைரலான சொமேட்டோ ஊழியர்

ஒரே ஒரு சிரிப்பு தான்...! இணையம் முழுக்க வைரலான சொமேட்டோ ஊழியர்
  • Share this:
இந்திய அளவில் சொமேட்டோ நிறுவனங்கள் உணவு டெலிவரி செய்வதில் முன்னிலையில் இருந்துவருகின்றனர். சொமேட்டோ ஊழியர் ஒருவர் தனது வாடிக்கையாளருக்கு உணவு கொண்டு செல்லும் முன் புன்னகையாக தனது வேலையை தொடங்குகின்றார். இந்த வீடியோ டிக்டாக்கில் அதிகம் பகிரப்பட்டது.

இந்த வீடியோவில் சொமேட்டோ ஊழியரின் சிரிப்பு அனைவராலும் ஈர்க்கப்பட்டது. இதனை பார்த்த சொமேட்டோ நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இளைஞரின் புன்னகையை ப்ரொபைல் போட்டோவாக மாற்றியது.

 




மேலும் இளைஞர் தனது பனியின் போது இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்ள ஹெல்மெட் அணிந்த படி இருந்ததால் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு பதிவில் இளைஞர் ஹெல்மெட் அணிந்த படி புன்னகைத்த புகைப்படத்தை வெளியிட்டு ஹெல்மெட் குறித்த அவசியத்தை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.



மேலும் லேஸ் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இளைஞரின் சிரிப்பு குறித்து ட்வீட் செய்துள்ளது.



பலரும் இணையத்தில் #ZomatoBoy என்ற ஹேஷ்டேக்கில் இளைஞரின் புன்னகை புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர்.

 





 

First published: February 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading