ஆன்லைன் சேவை அதிகரித்த இந்த காலத்தில் நல்லது கெட்டது என அனைத்திற்கும் அதை அணுகுவது வழக்கமாகி விட்டது. இந்த சமயத்தில் உணவு டெலிவரி மையமான சொமேட்டோவிற்கு புத்தாண்டு அன்று ஆர்டர்கள் குவிந்ததை அடுத்து டெலிவரி பாய்கள் அனைவரும் விறுவிறுப்பாக டெலிவரி செய்துள்ளனர்.
இந்த நிலையில் சொமேட்டோ நிறுவனத்தின் சிஇஓ ஆர்டர்கள் அடுத்தடுத்து வந்ததை அடுத்து தானே களத்தில் இறங்கி உணவு டெலிவரி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவர் பதிவிட்ட ட்வீட் வைரலாகியுள்ளது.
டெலிவரி பாயாக அவதாரமெடுத்த Zomato CEO
Zomato இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியும் ஆன தீபிந்தர் கோயல் புத்தாண்டு தினத்தன்று, உணவு டெலிவரி பாயாக பணியாற்றினார். ஒரு நிறுவனத்தின் CEO தானாக முன்வந்து உணவு டெலிவரி செய்வது என்பது பாராட்டக்கூடிய செயலாகும். புத்தாண்டு கொண்டாட்டங்கள் காரணமாக சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்பவர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்ததை அடுத்து, ஆர்டர் டெலிவரி செய்பவர்கள் கடும் வேலை பளுவிற்கு ஆளாயினர். அவர்கள் நெருக்கடியை எதிர்கொண்டபோது தலைமை நிர்வாக அதிகாரி டெலிவரி பாயாக மாறி களத்தில் இறங்கியுள்ளார்.
My first delivery brought me back to the zomato office. Lolwut! https://t.co/zdt32ozWqJ pic.twitter.com/g5Dr8SzVJP
— Deepinder Goyal (@deepigoyal) December 31, 2022
இதில் சுவாரஸ்யம் என்னவெனில் Zomato இணை நிறுவனரும் தலைவருமான தீபிந்தர் கோயல் புத்தாண்டு தினத்தன்று உணவு விநியோக தளத்தின் டெலிவரி பாய் ஆன நிலையில், அவருக்கு Zomato அலுவலகத்திலிருந்தே முதல் ஆர்டர் கிடைத்துள்ளது. அதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மொத்தம் 4 டெலிவரியை வழங்கியுள்ளார். அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தகவலை பகிர்ந்து கொண்டு, தனது சொந்த நிறுவனத்தில் இரண்டு ஆர்டர்களை டெலிவரி செய்யப் போவதாகக் கூறி மகிழ்ச்சியடைந்துள்ளார்.
சொமோட்டோ நிறுவனம் படைத்த சாதனை
புத்தாண்டு தினத்தன்று நிறுவனம் பெற்ற ஆர்டர்களின் அளவு, முந்தைய மூன்று புத்தாண்டு தினங்களில் நிறுவனம் பெற்ற ஆர்டர்களின் தொகைக்கு சமம் என்ற தகவலையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்
இந்த சம்பவத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர். சிலர் இது உங்களின் விளம்பரத்தின் ஒரு பகுதியா எனவும் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.