வேலை தேடும் வலைதளங்களில் மிக முக்கியமானதும் பிரபலமானதும் உள்ளது நாக்குரி வலைத்தளம் ஆகும். அதே நேரத்தில் மக்கள் விரும்பும் உணவுப் பொருட்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கே டெலிவரி செய்யக்கூடிய நிறுவனங்களில் முக்கியமானதாக இருப்பது சொமேட்டோ நிறுவனம். இந்த இரண்டு நிறுவனங்களின் நிறுவனர்களும் சமீபத்தில் சந்தித்துக் கொண்ட போது தான் சொமேட்டோ நிறுவனரை பற்றிய சில ரகசியங்கள் தெரியவந்துள்ளன.
நாக்குரி நிறுவனத்தின் நிறுவனர் சஞ்சீவ் பிக்சந்தணி சமீபத்தில் சொமேட்டோ நிறுவனத்தின் நிறுவனரான தீபிகோயலுடன் சமீபத்தில் நட்பு ரீதியான சந்திப்பை மேற்கொண்டனர். அதில் தீபி கோயல் மட்டுமல்லாது சொமேட்டோ நிறுவனத்தின் மற்ற முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது அவர்கள் பேசிக் கொண்டிருந்ததில் இருந்து ஒரு புதிய செய்தி தெரிய வந்துள்ளது.
அதாவது சொமேட்டோ நிறுவனத்தின் நிறுவனர் தீபிகோயலும் மற்ற சீனியர் மேனேஜர்களும் வருடத்தில் குறைந்தப்பட்சம் நான்கு முறையாவது டெலிவரி பாயாக வேலை செய்கிறார்கள். தான் யார் என்று வெளியே காட்டிக் கொள்ளாமல் சொமேட்டோவின் டெலிவரி பாய் போலவே சொமேட்டோ டீ-சர்ட்டை அணிந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்கிறார்கள். இது சற்றும் எதிர்பாராத ஒன்று எனவும் மிகவும் பாராட்டத்தக்க கூடிய விஷயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Read More: ஃபிளிப்கார்ட்டில் வாட்ச் ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் என்ன வந்தது தெரியுமா? அதிர்ச்சி சம்பவம்!
அது மட்டுமில்லாமல் “சொமேட்டோவில் எனக்கு மிகவும் பிடித்த விஷயமே அவர்கள் எப்போதும் தங்களை அதிகாரிகளாக நினைத்துக் கொள்ளாமல் மக்களோடு மக்களாக சேர்ந்து பழகி அவர்களின் தேவைக்கேற்ப சேவைகளை அளிக்க முயற்சி செய்கிறார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக தீபி கோயல் இதுபோல சில நேரங்களில் டெலிவரி பாய்யாக வேலை செய்வதாகவும் இதுவரை யாரும் அவரை கண்டுபிடித்ததில்லை எனவும் அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் ஏழாம் தேதி அவர் பதிவிட்ட இந்த ட்வீட் ஆனது சில மணி நேரங்களிலேயே பலமுறை ரீட்வீட் செய்யப்பட்டு வைரலாகி, வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. அதில் ஒருவர் “வாவ், இப்படி செய்வதன் மூலம் நேரடியாக வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பையும், எந்த அளவிற்கு திருப்தியாக உள்ளனர் என்பதையும் நேரடியாக நீங்கள் தெரிந்து கொள்ள முடியும், எனவும் அது மட்டும் இல்லாமல் உங்களது நிறுவன பணியாளர்களின் நடத்தை எப்படி உள்ளது என்பதை நேரடியாக கண்டு உணர்ந்து கொள்ள உதவியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மற்றொருவர் “எந்த வேலையும் கீழ்த்தரமானது அல்ல. தான், தன்னுடைய பணியாளர்களிடமிருந்து என்ன வேலையை செய்ய வேண்டும் வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த வேலையை நாமும் செய்வது மிக அருமையான பாராட்டக்கூடிய விஷயம்” என்று வாழ்த்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food Delivery App, Zomato