இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோவின் சிஇஓவாக இருப்பவர் தீபேந்திர கோயல். இவர் புத்தாண்டு தினத்தில் மேற்கொண்ட சர்ப்ரைஸ் செயல் தான் சமூக வலைத்தளத்தில் டிரென்டாகி வருகிறது. இந்த நிறுவனத்தில் சுமார் 4,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஆயிரக்கணக்காணோர் டெலிவரி பாய்களாக வேலை செய்கின்றனர்.
இந்நிலையில், நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் சிஇஓ தீபேந்திர கோயல், புத்தாண்டு தினத்தில் தாமே டெலிவரி பாயாக மாறி புது அவதாரம் எடுத்துள்ளார். சோமோட்டோ நிறுவனத்தின் சீருடையை அணிந்து கொண்டு கையில் உணவுப் பொருள்களுடன் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த தீபேந்தர் சில ஆர்டர்களை நானே டெலிவரி செய்யப் போகிறேன். சீக்கிரம் வேலையை முடித்து ஒரு மணிநேரத்தில் திரும்பிவிட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
பொதுவாக டிசம்பர் 31ஆம் தேதியும் அன்றைய புத்தாண்டு இரவிலும் சோமேட்டோ நிறுவனத்திற்கு வழக்கத்தை விட பல மடங்கு ஆடர்கள் குவியும். 2021 டிசம்பர் 31ஆம் தேதி சுமார் 20 லட்சம் ஆடர்கள் குவிந்ததாக சோமேட்டோ நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்தாண்டு, இந்த எண்ணிக்கை தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, தேவை அதிகம் உள்ள காலத்தில் தானே டெலிவரி பாயாக களத்தில் குதித்து வேலை செய்கிறார் சிஇஓ தீபேந்தர் கோயல்.
இதையும் படிங்க: ஆர்டர்களை குவித்த ஆணுறை.. லிஸ்டில் இடம்பிடித்த பிரியாணி, கிச்சடி.. புத்தாண்டில் பரபர விற்பனை விவரம் இதுதான்!
தீபேந்தர் இவ்வாறு டெலிவரி பாயாக வேலை செய்வது முதல் முறை அல்ல. சொமேட்டோ நிறுவனத்தின் சிஇஓ தீபிகோயலும் மற்ற சீனியர் மேனேஜர்களும் வருடத்தில் குறைந்தப்பட்சம் நான்கு முறையாவது டெலிவரி பாயாக வேலை செய்கிறார்கள்.
My first delivery brought me back to the zomato office. Lolwut! https://t.co/zdt32ozWqJ pic.twitter.com/g5Dr8SzVJP
— Deepinder Goyal (@deepigoyal) December 31, 2022
தான் யார் என்று வெளியே காட்டிக் கொள்ளாமல் சொமேட்டோவின் டெலிவரி பாய் போலவே சொமேட்டோ டீ-சர்ட்டை அணிந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்கிறார்கள். இந்த தகவலை naukri நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் சஞ்சீவ் பிக்சந்தணி கடந்த அக்டோபர் மாதம் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food Delivery boys, Zomato