Home /News /trend /

சோமேட்டோவின் இன்ஸ்டன்ட் டெலிவரி அறிவிப்பு! எதிர்க்கும் நெட்டிசன்கள்- ஏன் தெரியுமா?

சோமேட்டோவின் இன்ஸ்டன்ட் டெலிவரி அறிவிப்பு! எதிர்க்கும் நெட்டிசன்கள்- ஏன் தெரியுமா?

Zomato

Zomato

இன்றைய கால கட்டத்தில் முடியாதது ஒன்றுமில்லை என்கிற நிலையை தொழில்நுட்பம் தான் உருவாக்கி உள்ளது.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப வசதிகளின் உதவியோடு இன்று நம்மால் பலவித விஷயங்களை எளிதில் செய்து முடித்து விட முடியும். முன்பெல்லாம் மாத கணக்கில் செய்ய கூடிய விஷயங்களை கூட, தற்போது வெறும் சில நொடிகளில் நம்மால் செய்ய முடிகிறது.

இது எல்லா துறைகளிலும் பொருந்த கூடிய ஒன்றாகவும் மாறி உள்ளது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல வகையில் நாம் முன்னேறி வருகின்றோம். அதே போன்று இன்றைய ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் இதை பயன்படுத்தி மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.

இன்றைய கால கட்டத்தில் முடியாதது ஒன்றுமில்லை என்கிற நிலையை தொழில்நுட்பம் தான் உருவாக்கி உள்ளது. இத்தகையை வசதியை பயன்படுத்தி தான் டாப் நிறுவனங்களில் ஒன்றான சோமேட்டோ நிறுவனமும் ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ, தனது வாடிக்கையாளர்களுக்கு வெறும் 10 நிமிடத்திற்குள் உணவை டெலிவரி செய்ய உள்ளதாக அதிரடி முடிவை எடுத்துள்ளது. இது அடுத்த வாரத்தில் இருந்து குர்கான் பகுதிகளில் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த அறிவிப்பிற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இது உணவு டெலிவரி செய்ய கூடிய தொழிலாளர்களுக்கு மிக பெரிய சுமையாக மாறி விடும் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். அதே போன்று, 10 நிமிடத்தில் டெலிவரி செய்தாக வேண்டும் என்பதால் இது அவர்களுக்கு பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும் விரைவாக டெலிவரி செய்ய வேண்டும் என்று அவர்கள் சாலையில் விரைவாக சென்றால், பல வித விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்று பல தரப்பினர் இந்த இன்ஸ்டன்ட் டெலிவரி வசதி குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

also read : மட்டன் குழம்பு சமைத்து தராத மனைவி: 100-ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவித்த கணவர்!

இது ஒரு புறம் இருக்க, நெட்டிசன்களும் தங்கள் பங்கிற்கு இந்த அறிவிப்பை வறுத்தெடுத்து வருகின்றனர். சோமேட்டோ நிறுவனத்தின் நிறுவனரான தீபிந்தர் சிங் 10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யப்படும் என்று டிவிட்டர் பக்கத்தில் அறிவிப்பை தந்துள்ளார். அந்த அறிவிப்பை வைத்து தான் நெட்டிசன்கள் விளையாடி வருகின்றனர். சிலர் இந்த அறிவிப்பிற்கு பதிலாக வேறு சிலவற்றை பரிந்துரை செய்துள்ளனர். 10 நிமிட ஆம்புலன்ஸ் சேவை, குற்றங்கள் செய்வோருக்கு 10 நிமிடத்தில் தண்டனை கொடுத்தல், 10 நிமிடத்தில் நம்மை தூங்க வைக்க கூடி ஆப், 10 நிமிட கல்லூரி வகுப்புகள் என பல வித பரிந்துரைகள் வந்தவண்ணம் உள்ளது. இந்த ட்வீட்கள் அனைத்துமே தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

அதே போன்று, 10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்தாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இது டெலிவரி செய்ய கூடிய நபரின் உயிரை பணய வைப்பதற்கு சமமாகும். என்கிற கருத்தை அதிகமானோர் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Zomato

அடுத்த செய்தி