ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

உடல் எடையைக் குறைத்தால் ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை - நிறுவனத்தின் அசத்தல் ஆஃபர்!

உடல் எடையைக் குறைத்தால் ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை - நிறுவனத்தின் அசத்தல் ஆஃபர்!

சிஇஒ நிதின் காமத்

சிஇஒ நிதின் காமத்

உடல் எடையைக் குறைக்கும் ஊழியர்களுக்கு 10 லட்சம் ஊக்கத்தொகை ஜீரோதா நிறுவனம் அறிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Bangalore, India

  ஜீரோதா என்ற ஆன்லைன் தரகு நிறுவனத்தில் உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் ஊழியர்களுக்குப் பல அசத்தல் ஆஃபர்களை அறிவித்துள்ளனர். அப்படிச் செய்யும் ஊழியர்களில் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  உடல் எடை குறைத்துச் சரியான கட்டுப்பாடான உடல் அமைப்பின் ஆரோக்கியத்தை ஊழியர்களிடம் கொண்டு வர இந்த மாதிரியான சலுகைகளை அறிவித்துள்ளார் ஜீரோதா நிறுவனத்தின் சிஇஒ நிதின் காமத். அவர் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு அடிக்கடி உடல் பாதிப்புகள் ஏற்பட்டு வந்தால் இந்த புது விதமான சலுகையை அறிமுகம் செய்துள்ளார்.

  உடல் எடை குறைப்பு சவால்களைச் சரியாக கடைப்பிடித்து உடல் எடையைக் குறைக்கும் ஊழியர்களுக்குப் பெரிய அளவில் ஊக்கத்தொகையும், அதில் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு 10 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படவுள்ளது.

  இந்த சவாலுக்காக நிறுவனம் பிட்னஸ் ட்ராக்கர் ஒன்றின் மூலம் ஊழியர்களின் தினசரி கலோரிகள் கரைப்பதைக் கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் 350 கலோரிகள் வரை குறைக்கவேண்டும் என்பது இந்த போட்டியின் விதிமுறையாக வைக்கப்பட்டுள்ளது.

  அப்படிச் சரியாகக் குறைபவர்களுக்கு அசத்தல் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் சரியாக உடல் பயிற்சி செய்து கலோரிகள் கரைக்கும் நபர்களுக்குச் சவாலில் 90 % முடித்தால் அவர்களுக்கு ஒரு மாத சம்பளம் அப்படியே போனஸ் ஆகத் தரப்படும்.

  Also Read : மெடிக்கல் மிராக்கிள்: மூளைச் சாவு அடைந்ததாகக் கூறப்பட்ட நபரின் உடலிலிருந்து உறுப்புகளை அகற்றும் முன் தெரிந்த அசைவு!

  கொரோனா காலத்தில் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்த்ததில் உடல் ஆரோக்கியத்தின் மேல் உள்ள கவனம் குறைத்துள்ளது. அதனால் இந்த புது வித செயல்கள் ஊழியர்களை உடல் பயிற்சி செய்யத் தூண்டும் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் நிதின் காமத் கூறியுள்ளார்.

  மேலும் அவரின் உடல் எடை குறைத்த அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டுள்ளார். இது மட்டும் இன்றி மேலும் ஒரு அசத்தல் சலுகையாக பிஎம்ஐ அளவில் 25க்கும் குறைவில் உள்ளவர்களுக்கு மாத ஊதியத்தில் பாதியை ஊக்கத்தொகையாகத் தருவதாக அறிவித்துள்ளார்.

  Published by:Janvi
  First published:

  Tags: Fitness, Office, Weight loss