Home /News /trend /

வெயிட்டை குறைத்தால் போனஸ்... வாயை கொடுத்து வம்பில் சிக்கிய பிரபல நிறுவன சி.இ.ஓ!

வெயிட்டை குறைத்தால் போனஸ்... வாயை கொடுத்து வம்பில் சிக்கிய பிரபல நிறுவன சி.இ.ஓ!

நிதின் காமத்

நிதின் காமத்

Zerodha CEO | உடல் எடையை குறைத்தால் கூடுதல் சம்பளமாம்..வைரல் ட்வீட்

கொரோனா பெருந்தோற்று பரவலால் எங்கு பார்த்தாலும் வொர்க் ஃப்ரம் ஹோம் (WFH) காணப்படுவதால், வீட்டிலேயே உட்கார்ந்து வேலை பார்ப்பது புகைப்பிடித்தலுக்கு சமமானது என்ற சொற்தொடர் பிரபலமடைந்து வருகிறது.

இந்நிலையில் உலக சுகாதார தினத்தன்று, ஆன்லைன் புரோக்கிங் நிறுவனமான (Zerodha) ஜெரோதாவின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான நிதின் காமத் தனது ஊழியர்களின் உடல் ஆரோக்கியத்திற்காக வெளியிட்ட அறிவிப்பு ஒன்று சோசியல் மீடியாவில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

ஃபிட்னஸ் மீது அதிக ஆர்வம் கொண்ட ஜெரோதா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிதின் காமத் தனது ட்விட்டர் பக்கத்தில், உடல் நிறை குறியீட்டெண் (BMI) 25க்கும் குறைவாக உள்ளவர்களுக்கு போனஸாக அரை மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதத்திற்குள் ஊழியர்கள் தங்களது சராசரி உடல் நிறை குறியீட்டு எண்ணை 24க்கு கீழ் கொண்டு வர முடிந்தால் நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும் போனஸாக மேலும் அரை மாதம் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து ஊழியர்களின் கூட்டு பிஎம்ஐ 25க்குக் குறைவாக இருந்தால், ஒவ்வொருவரும் மற்றொரு அரை மாதச் சம்பளத்தை போனஸாகப் பெறத் தகுதி பெறுவார்கள் என அறிவித்துள்ளார்.

also read : திடீரென பற்றி எறிந்த ராயல் என்ஃபீல்டு பைக் - வைரல் வீடியோ
மேலும் பிற நிறுவனங்களையும் இதுபோன்ற சவால்களை முன்னெடுக்க அழைப்பு விடுத்துள்ள காமத், இருப்பதிலே குறைவான உடல் நிறை குறியீட்டு எண்ணை கொண்டவர்களோ, அல்லது அதிகளவில் உடல் நிறை குறியீட்டு எண்ணில் மாற்றம் கண்டவர்களோ வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்கள். ஒரு சுகாதார நிறுவனம் இந்த முயற்சியை முன்னெடுக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற முயற்சியை உங்கள் நிறுவனத்திலும் முன்னெடுக்க நினைத்தால், கமெண்டுகளில் தெரியப்படுத்துங்கள் எனக் கூறியுள்ளார்.
"இது உடல்நலம் மற்றும் உடற்தகுதியைக் கண்காணிப்பதற்கான சிறந்த நடவடிக்கை இல்லையென்றாலும், இது நிச்சயமாக அதற்கான முன்னெடுப்பை தொடங்க ஒரு வழியாகும், மேலும் ஆரோக்கியமாக இருக்க தினமும் 10,000 படிகள் நடக்க வேண்டும் என்றும் தனது ட்வீட்டில் பரிந்துரைத்துள்ளார்.

ஜெரோதா சிஇஓவின் இந்த யோசனை வரவேற்பை பெறுவதற்கு பதிலாக கடும் விமர்சனங்களை குவித்து வருகிறது. நீங்கள் அறிவித்து போனஸை பெற பல ஊழியர்கள் பட்டினி கூட கிடக்கலாம். வெளிப்புற தோற்றத்தை அளவிடும் முன்பு, உட்புறத்தை ஆராய்ந்து பாருங்கள் என கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

also read : தாகத்தால் தவித்த குரங்கிற்கு தண்ணீர் கொடுத்து உதவிய போக்குவரத்து காவலர் - வைரல் வீடியோ

தொடர்ந்து நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருவதால் காமத் தனது நிறுவனத்தில் இதற்கு முன்னதாக முன்னெடுக்கப்பட்ட பல விஷயங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ஜெரோதா நிறுவன ஊழியர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டே இந்த போட்டியை அறிவித்ததாக கூறியுள்ள அவர், கோவிட் மற்றும் (WFH) முதல் பல யோசனைகளை நிறுவனம் பரிசோதித்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறந்த ஆரோக்கியத்திற்கான முயற்சிகளை ஊக்குவிக்கும் விதமாக கடந்த ஆண்டு தனது பணியாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான லாட்டரி போனஸ் போட்டியை அறிவித்தது குறித்தும், யோகா மற்றும் மன நல ஆலோசனைகளை வழங்கியதையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கொரோனா லாக்டவுன் காரணமாக ஊழியர்கள் அனைவரும் வொர்க் ப்ரம் ஹோமில் இருப்பதால் அவர்களுக்கு நிறுவனம் சார்பில் செய்யப்படும் உடல் மற்றும் மன நல பரிசோதனையை மேற்கொள்ள முடியவில்லை என்றும், தனது பணியாளர்களில் பலர் சென்னையிலேயே இல்லை என்பதால், ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த ஆரோக்கியத்திற்கான முயற்சியை தள்ளிப்போடாமல், இதனை ஒரு நல்ல வழி என நினைத்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Trending

அடுத்த செய்தி