இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் நடிகையுடன் நாகினி டான்ஸ் வீடியோ டிக்-டாக் வீடியோ வைரலாகி வருகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் சமீபத்தில் தான் இந்திய திரும்பினார். டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சாஹல் இடம்பிடிக்காததால் தற்போது அவர் ஓய்வில் உள்ளார்.
சக வீரர்களுடன் எப்போதும் உற்சாகமாக இருக்கும் அவர், சாஹல் டிவி என்ற பெயரில் வீரர்களைப் பேட்டி எடுப்பது, நடனமாடுவது என பல வீடியோகளை வெளியிடுவார். போட்டிகளின் நடுவே சாஹல் செய்யும் சேட்டைகளும் கலகலப்பையும் பலர் ரசித்து வருகின்றனர்.
Also Read : மான்கட் வாய்ப்பை மறுத்த வீராங்கனை; போட்டியில் தோல்வி... ரசிகர்களின் இதயங்களில் வெற்றி... வைரலாகும் வீடியோ
மைதானத்தில் வீரர்களுடன் உற்சாகமாக இருப்பது போன்றே பொது இடங்களிலும் சாஹால் உள்ளார். நடிகையும் மாடலுமான ரமீத் சாந்து உடன் சாஹல் நடனமாடி உள்ளார். அந்த வீடியோவை ரமீத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நட்சத்திர ஹோட்டலில் இந்தி பாடல் ஒன்றுக்கு ரமீத் சந்து நடனமாட அதை பார்த்து சாஹல் மிரண்டு ஓடுவது போன்ற கேலியான வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
மற்றொரு வீடியோவில் சாஹல், ரமீத் சந்து மற்றும் ரமீத்தின் தோழி 3 பேரும் இணைந்து நாகினி டான்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த பலர் சாஹலுக்கு கேலியான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.