• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • 'Keep It Up' சவாலில் கலக்கும் இந்திய வீரர்கள்

'Keep It Up' சவாலில் கலக்கும் இந்திய வீரர்கள்

Keep It Up சவாலில் கலக்கும் இந்திய வீரர்கள்

Keep It Up சவாலில் கலக்கும் இந்திய வீரர்கள்

லாக் டவுன் நேரத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்த வீரர்கள் அவ்வப்போது இம்மாதிரியான வீடியோக்களை பகிர்ந்து  வருகின்றனர்.

  • Share this:
யுவராஜ் சிங் உருவாக்கிய Keep It Up சவாலை சச்சின், ரோஹித், ரஹானே மூவரும் வெற்றிகரமாக முடித்து ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளனர்.

ஊரடங்கு காலத்தில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் யுவராஜ் சிங் பேட்டின் விளிம்பு மூலம் பந்தை விடாமல் தட்டி வீடியோ ஒன்றை பதிவிட்டு சச்சின், ரோஹித், ஹர்பஜன் மற்றும் நடிகை தியா மிஷ்ரா ஆகியோர்களை சவாலுக்கு அழைப்பு விடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட சச்சின் அதற்கும் ஒரு படி மேல் சென்று கருப்பு துணியால் கண்ணை கட்டிக்கொண்டு பேட்டின் விளிம்பில் பந்தை விடாமல் தட்டி சவாலை வெற்றிகரமாக முடித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு யுவராஜை மீண்டும் சவாலுக்கு அழைத்தார்.




சச்சினை தொடர்ந்து யுவராஜின் சவாலை ஏற்ற ரோஹித் சர்மா, மற்றும் ரஹானே இருவரும் ’கீப் ட் அப்’ சவாலை முடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர். யுவராஜின் ’கீப் ட் அப்’ சவால் கிரிக்கெட் ரசிகர்களிடம் சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.




லாக் டவுன் நேரத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்த வீரர்கள் அவ்வப்போது இம்மாதிரியான வீடியோக்களை பகிர்ந்து  வருகின்றனர்.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: