ஸ்கின்னி ஜீன்ஸ் அணிந்து 42 கிலோமீட்டர் தூரம் மாரத்தானில் ஓடி, சாதனை படைத்த You Tuber ரியான் டிராஹான்..

ஸ்கின்னி ஜீன்ஸ் அணிந்து 42 கிலோமீட்டர் தூரம் மாரத்தானில் ஓடி, சாதனை படைத்த You Tuber ரியான் டிராஹான்..

சாதனை படைத்த யூடியூபர் ரியான் டிராஹான்

யூடியூபர் ரியான் சமீபத்தில் ஒரு ஸ்கின்னி ஜீன்ஸ், அணிந்து மராத்தான் ஓடிய வீடியோவை அவரது யூடியூப் பேஜ் மற்றும் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

  • Share this:
சில யூடியூபர்கள் அசாதாரண விஷயங்களை முயற்சிக்க விருப்பம் கொள்கின்றனர். அவர்கள் தங்கள் பார்வையாளர்களை கவர வித்தியாசமான சவால்களை மேற்கொள்கின்றனர்.

அத்தகைய ஒரு யூடியூப் நட்சத்திரம் தான் “ரியான் டிராஹான்”. இவரை 2.7 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். அவர் தனது ரசிகர்களுக்காக அவ்வப்போது சில சாகசங்களை செய்து அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் ரியான் சமீபத்தில் ஒரு ஸ்கின்னி ஜீன்ஸ், அணிந்து மராத்தான் ஓடிய வீடியோவை அவரது யூடியூப் பேஜ் மற்றும் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அதில் ரியான் ஸ்கின்னி ஜீன்ஸ் அணிந்து 26.2 மைல் (42.16 கிலோமீட்டர்) தூரம் ஓடியுள்ளார். 5 கி.மீட்டருக்கான நேர இலக்கு 24 நிமிடங்கள் 52 வினாடிகள் என நிர்ணயித்து கொண்ட நிலையில் ரியானால் அதை அடைய முடியவில்லை, ஸ்கின்னி ஜீன்ஸ் அணிந்திருந்ததால் அவரால் வேகமாக ஓட முடியவில்லை. முதல் முறையாக தோல்வியுற்றது ரியானுக்கு மிகவும் கடினமாக இருந்தது, இதனை தொடந்து அவர் சரியான நேரத்தில் 10 கி.மீ அடைய முடிந்தவரை வேகமாக ஓடினார். 10 கி.மீ கடந்த பின்னர் அவருக்கு எனர்ஜி பானம் வழங்கப்பட்டது. 

மேலும் ஒவ்வொரு 5 கிலோமீட்டருக்கும் மேலும் சங்கடமாக உணரத் தொடங்கினார். ஆனாலும் விடாமுயற்சியுடன் ஓடிக்கொண்டே இருந்தார். மாரத்தானின் போது ரியான் பல சவால்களை எதிர்கொண்டார். இந்த ஓட்ட பந்தயத்தை முடிக்க 4 மைல்கள் எஞ்சியிருந்த போது அவருக்கு பூரிட்டோ எனும் சப்பாத்தி ரோல் வழங்கப்பட்டது. மராத்தானின் முடிவில், ரியான் தரையில் மயங்கி விழுந்ததை அவர் ஷேர் செய்துள்ள வீடியோவில் காணலாம். இந்த வீடியோவை இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோ ரியானைப் பின்தொடர்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஏராளமானோர் இந்த வீடியோவிற்கு கமெண்ட்ஸ் செய்துள்ளனர். ஒருவர்,  “இது மிகவும் மரியாதைக்குரியது" என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு நபர், ரியானின் எடிட்டிங் மற்றும் திறமையை பாராட்டினார். ஒரு யூடியூபர், ரியான் நல்ல வேலை செய்துள்ளார் என்று கூறினார். ஸ்கின்னி ஜீன்ஸுடன் ரியான் ஓடுவதைப் பார்த்த ஜெர்மி ஜுட்கின்ஸ் என்ற நபர், எல்லாவற்றையும் விட  ஜீன்ஸ் ஜோடி ஏற்படுத்தும் வலி தான் தாங்கமுடியாதது என கமெண்ட் செய்துள்ளார். ரியானின் பல ரசிகர்கள் அவர் 26 மைல் மராத்தான் ஓட்டத்தை பார்த்து ஈர்க்கப்பட்டனர்.

  

முன்னதாக, ரியான் உலகின் மிகச்சிறிய வீட்டில் 24 மணி நேரம் வசித்து சாதனை படைத்தார். அவர் கையகல வீட்டில், நடந்ததை தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்த நிலையில் அந்த வீடியோ வைரலானது. வெறும் 25 சதுர அடி பரப்பளவில், உருவாக்கப்பட்டிருந்த அந்த குட்டி வீட்டில், அடுப்பு, கழிப்பறை, மினி ஜன்னல்கள் பொருத்தப்பட்டிருந்தன. இதுவரை அந்த வீடியோவை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Sankaravadivoo G
First published: