ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

புலி பொம்மையை வைத்து குரங்குகளிடம் பிராங்க் செய்த யூடியூபர் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

புலி பொம்மையை வைத்து குரங்குகளிடம் பிராங்க் செய்த யூடியூபர் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

புலி பொம்மையை வைத்து குரங்குகளிடம் பிராங்க் செய்த யூடியூபர்

புலி பொம்மையை வைத்து குரங்குகளிடம் பிராங்க் செய்த யூடியூபர்

யூடியூபர் ஒருவர் புலி பொம்மையை வைத்து குரங்குகளிடம் பிராங்க் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நெட்டிசன்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் பிராங்க் வீடியோக்களைக் அதிகம் விரும்பிக் காண்கின்றனர். அந்த வீடியோக்களில் சந்தைகள், வணிக வளாகங்கள் அல்லது பூங்காக்களில் உள்ளவர்களை யூடியூபர்கள் கேலி செய்வதைக் போல் காட்டப்படுகின்றன. ஆனால், இங்கு ஒரு யூடியூபர் ஒரு படி மேலே சென்று விலங்குகளை பிராங்க் செய்து வருகிறார்.

அவர் ஒரு புலி பொம்மை மூலம் குரங்கு, மாடு போன்ற விலங்குகளை பயபுறுத்தும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. யூடியூபில் ஏஞ்சல் நாகா எனும் சேனலில் பதிவேற்றப்படும் வீடியோக்களில் வரும் நபர் குரங்குகள் மற்றும் நாய்களின் முன்னால் புலி பொம்மையை வைத்து அவற்றின் ரியாக்சன்களை கவனிக்கிறார். போலி புலியைப் பார்த்ததும், விலங்குகள் திடுக்கிட்டு அங்கிருந்து ஓடிவிடுகின்றன.

Also read: திருச்சி: போஸ்டர்கள் அச்சடிப்படிப்பதற்கும் ஒட்டுவதற்கும் கட்டுப்பாடு விதித்த காவல்துறை

ஒரு கட்டத்தில், அவர் தூங்கும் நாயின் பின்னால் பொம்மையை வைத்தார். தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும் நாய் புலி பொம்மை கண்ட போது, பதறியடித்துக் கொண்டு ஓடியது, பின்னர் தூரத்திலிருந்து குரைக்கத் தொடங்கியது. இருப்பினும், வீடியோவின் முடிவில், யூடியூபர் விலங்குகளுக்கு உணவளிப்பதைக் காணலாம். இது விலங்குகளை பயமுறுத்தியதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்பது போல இதனை செய்வதாக அந்த நபர் கூறினார்.

' isDesktop="true" id="370043" youtubeid="dKWUQilBrU8" category="trend">

' isDesktop="true" id="370043" youtubeid="2DGipfrvDE0" category="trend">

இந்த வீடியோ 50 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளையும் அதிக லைக்குகளையும் பெற்றுள்ளது. இருப்பினும் இந்த வீடியோக்களுக்கு பல விதமான கருத்துக்கள் எழுந்துள்ளது. விலங்குகளுக்கு உணவு வழங்கியதற்காக யூடியூபரைப் சிலர் பாராட்டினார்.

அதேசமயம் சிலர் அந்த வீடியோ போலியானது என்று கூறினர். ஒரு நெட்டிசன் வீடியோவில் காட்டப்பட்டுள்ள நாய்கள் மற்றும் குரங்குகளை “பணம் செலுத்திய நடிகர்கள்” என்று அழைத்தார். இன்னும் சிலர் வேடிக்கையான வீடியோவை உருவாக்குவது பரவாயில்லை. ஆனால் விலங்குகளை பயமுறுத்துவது சரியல்ல. என்று தெரிவித்தனர். இருப்பினும் இந்த வீடியோ பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது.

Published by:Rizwan
First published:

Tags: Trending, Viral Videos