Home /News /trend /

இலவச பெட்ரோல் பங்க்... அதிரடியாக அறிவித்து வாரிக்கொடுக்கும் யூ-டியூபர்!

இலவச பெட்ரோல் பங்க்... அதிரடியாக அறிவித்து வாரிக்கொடுக்கும் யூ-டியூபர்!

வீடியோவை வைரலாக்கினால் இப்படியொரு பரிசா?  வாரிக்கொடுக்கும் யூ-டியூபர்!

வீடியோவை வைரலாக்கினால் இப்படியொரு பரிசா? வாரிக்கொடுக்கும் யூ-டியூபர்!

இந்த வீடியோவை இதுவரை 3,472,000க்கும் அதிகமானோர் கண்டு ரசித்து வருகின்றனர். அதேபோல் யூ-டியூப்பில் அவரது தாராள மனப்பான்மையை பலரும் பாராட்டினாலும், வழக்கம் போல் சிலர் தாறுமாறாக விமர்சிக்கவும் செய்துள்ளனர்.

கொரோனா, லாக்டவுன், உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு, கச்ச எண்ணெய் விலையேற்றம், ரஷ்யா - உக்ரைன் போர் என அடுத்தடுத்து மக்கள் அதிர்ச்சிகளை சந்தித்து வரும் நிலையில், விண்ணை முட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மக்களுக்கு பேரதிர்ச்சியாக மாறியுள்ளது. குறிப்பாக மத்திய அரசு கடும் பண வீக்கத்தில் சிக்கித் தவிப்பதால் அடுத்தடுத்து பல பிரச்சனைகளை அனுபவித்து வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசு விலைவாசியைக் குறைத்து வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கும் விதமாகவும் கடந்த வாரம் எரிபொருள் மீதான கலால் வரிக் குறைப்பு, சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம், பல்வேறு இறக்குமதி பொருட்களுக்குச் சுங்க வரிக் குறைப்பு உள்ளிட்டவற்றை அறிவித்தது. மத்திய அரசு பெட்ரோலுக்கான கலால் வரியை பெட்ரோல் லிட்டருக்கு 9.5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.105.41 லிருந்து ரூ.95.91 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.96.67 லிருந்து ரூ.89.67 ஆகவும் உள்ளது. இந்நிலையில், அமித் என்ற யூடியூபர் தனது வீடியோவை வைரலாக்க ஒரு தனித்துவமான யோசனையை கொண்டு வந்துள்ளார்.

தனது வீடியோவை வைரலாக்கி வெற்றி காண நினைத்த அவர், ரூ.1 லட்சம் வரை பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தனது விளம்பர யுக்திக்கு 'கிரேஸி பெட்ரோல் பம்ப்' என பெயரிட்டுள்ள அவர், எரிபொருள் நிலையங்களில் அங்கு பணியாற்றும் ஊழியர்களின் சீருடையுடன் பணியாற்றி, தனது சேனலையும் அதன் போட்டியையும் அறிவித்து வருகிறார்.

என்னது வீடியோ பார்த்தால் இலவச பெட்ரோல் கிடைக்குமா? என அனைத்து மக்களும் குழப்பத்தில் இருந்தாலும், பெட்ரோல் பங்குகள் முன்னால் கூட்டம் குவிவது மட்டும் குறையவில்லை. இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ, XYZ என்ற யூடியூப் சேனலுக்காக இலவச பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டுள்ளதாக தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.இந்த வீடியோவை இதுவரை 3,472,000க்கும் அதிகமானோர் கண்டு ரசித்து வருகின்றனர். அதேபோல் யூ-டியூப்பில் அவரது தாராள மனப்பான்மையை பலரும் பாராட்டினாலும், வழக்கம் போல் சிலர் தாறுமாறாக விமர்சிக்கவும் செய்துள்ளனர். இதனால் கமெண்ட் செக்‌ஷன் நிறைந்து வழிகிறது. இந்த யோசனை சிறப்பாக செயல்பட்டது மற்றும் வீடியோ வைரலானவுடன், பெட்ரோல் பம்பில் உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் பம்புகளுக்கு அருகே பெரும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

Also see... உங்கள் ஃபோன் டேட்டாவை எவ்வாறு சேமிக்கலாம் தெரிந்துகொள்ளுங்கள்.!

இதுபோன்ற வீடியோக்களை உருவாக்கியதற்காக யூடியூபரைப் பாராட்டிய ஒரு வர்ணனையாளர், "இந்த மனிதரும் அவரது குழுவினரும் எதிர்காலத்தில் அவர் என்ன செய்யப் போகிறார் என்று கற்பனை செய்து பார்க்கும் ஒரு தலைசிறந்த படைப்பாக மாற்றும் உள்ளடக்கத்தை நாம் அனைவரும் பாராட்டாமல் இருக்க முடியுமா? என தெரிவித்துள்ளார். சிலர் இது வெறும் விளம்பரத்திற்கான வீடியோ இல்லை, நிஜமானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Viral Video, Youtube

அடுத்த செய்தி