Home /News /trend /

ஓகே சொல்லிட்டாங்க! - மதன் கெளரி சொன்ன காதல் கதை

ஓகே சொல்லிட்டாங்க! - மதன் கெளரி சொன்ன காதல் கதை

மதன் கௌரி

மதன் கௌரி

Madan gowri wedding : நாங்க ரெண்டு பேரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவங்க, ஆனாலும் எங்க வீட்ல எந்த எதிர்ப்பும் சொல்லாம எங்க காதல ஏத்துக்கிட்டாங்க. எங்க பெற்றோர்கள் மாதிரி..

  யூடியூப் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் மதன் கௌரி. யாரும் அறிந்திராத பல வெளிநாட்டு, உள்நாட்டு சுவாரஸ்யமான தகவல்களை விரிவாக பேசி வீடியோவாக வெளியிடுபவர். ஆரம்பத்தில் விக்கிப்பீடியா தகவல்களை அப்படியே வாசிப்பதாக பலரால் விமர்சிக்கப்பட்டாலும் தற்போது நம்பகத்தன்மையான தகவல்கள் பலவற்றை பகிர்ந்து மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.


  கடந்தாண்டு மதன் கௌரி தன் டிவிட்டரில் பிரபல ‘டெஸ்லா’ கார் கம்பெனி அதிபர் எலான் மஸ்க் அவர்களை டேக் செய்து, “இந்தியாவில் மின்சார வாகனங்கள் உற்பத்தி எப்போது தொடங்கப்படும்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்த ட்வீட்டுக்கு சற்றும் எதிர்பார்க்காத வண்ணம்  பதிலளித்த எலான் மஸ்க் பதில் ட்வீட் பதிவிட்டார். “இந்தியாவில் அதிக இறக்குமதி வரி விதிக்கப் படுவதால், மின்சார வாகன இறக்குமதி  சற்று தாமதம் ஆகிறது. ’’ என்று மதனுக்கு ரிப்ளை செய்திருந்தார். தமிழகத்தை சேர்ந்த ஒரு யூ டியூபருக்கு உலகமே வியந்து பார்க்கும் ஒரு சி.இ.ஒ ட்விட்டரில் பதிலளித்தது வியப்பை ஏற்படுத்தியது. இதனால் மதனுக்கு ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்தது.

  தற்போது  திருமணம் குறித்து தன் இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார். பள்ளி தோழி நித்யாவை மணக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


  மேலும் தன் திருமணம் குறித்து யூ டியூப் சேனலில் விரிவாக பேசி பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், ``மதுரையில் பன்னிரண்டாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தப்போ நானும் நித்யாவும் ஒரே பள்ளியில் படிச்சோம். நேர்ல பேசினதில்ல, முதன்முதலா ஃபேஸ்புக்ல தான் பேசினோம். நண்பர்களானோம். ரெண்டு பேருக்குமே பிடிச்சு போச்சு. பள்ளி முடிஞ்சும் எங்க நட்பு தொடர்ந்துச்சு.


  இதையும் படிங்க: தங்க முலாம் பூசப்பட்ட ஸ்வீட்... விலை கிலோ ரூ.16,000 - வாய்பிளக்கும் நெட்டிசன்கள்!


  வெவ்வேறு கல்லூரியில் சேர்ந்தோம். இருவரின் நட்பு காதலாச்சு. ஒரு கட்டத்தில் பெரிய சண்டை ஏற்பட்டு பிரேக் அப் பண்ணிக்கிட்டோம். அந்த சண்டைக்கு காரணம் நான் தான். அந்த பிரேக் அப் கொடுத்த மன அழுத்தத்துல இருந்து தப்பிக்க தான் யூ டியூப் சேனல் ஆரம்பிச்சேன். நான் போட்ட வீடியோஸ் கொஞ்சம் கொஞ்சமா ரீச் ஆச்சு. நிறைய ஃபாலோயர்ஸ் வந்தாங்க. அப்புறம் அதையே முழு நேரமா பண்ணேன். அதன் பிறகு திரும்பவும் அவங்ககிட்ட பேசும் வாய்ப்பு கெடச்சப்போ மன்னிப்பு கேட்டு என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதமா-ன்னு கேட்டேன். அவங்களும் ஓகே சொல்லிட்டாங்க. நாங்க ரெண்டு பேரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவங்க, ஆனாலும் எங்க வீட்ல எந்த எதிர்ப்பும் சொல்லாம எங்க காதல ஏத்துக்கிட்டாங்க. எங்க பெற்றோர்கள் மாதிரியே எல்லாரும் சாதி, மதம் பார்க்காம காதலர்கள ஏத்துக்கணும்.’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Aswini S
  First published:

  Tags: Trending, Trending Videos

  அடுத்த செய்தி