Home /News /trend /

‘மீட்டப்பிற்கு’ ஆயிரக்கணக்கில் குவிந்த ரசிகர்கள்..144 தடை உத்தரவு... இது வட இந்திய டிடிஎஃப்!

‘மீட்டப்பிற்கு’ ஆயிரக்கணக்கில் குவிந்த ரசிகர்கள்..144 தடை உத்தரவு... இது வட இந்திய டிடிஎஃப்!

பிளையிங் பீஸ்ட் கவுரவ் தனேஜா.

பிளையிங் பீஸ்ட் கவுரவ் தனேஜா.

தனது பிறந்தநாளை தன் ரசிகர்களுடன் கொண்டாட முடிவு செய்து, மெட்ரோ ரயிலில் ஒரு பெட்டி முழுக்க முன்பதிவு செய்து, மீட்டப்பிற்கு அழைப்பு விடுத்தார் தனேஜா!

    வட இந்தியாவில் யூடியுபர் ஒருவர் டிடிஎஃப் வாசனைப் போல் பிறந்தநாள் 'மீட்டப்' நடத்தி அவரது ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்ததால், அவரை காவல்துறை கைது செய்துள்ளது.

    உத்தர்பிரதேசத்தைச் சேர்ந்தவர் கவுரவ் தனேஜா. ‘பிளைங் பீஸ்ட்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் நடத்தி வருகிறார். அவருக்கு யூடியுபில் 7.59 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளார்கள். அதாவது அவரை 75 லட்சம் பேர் யூடிபில் ஃபாலோ செய்கிறார்கள்.

    அவர் தனது பிறந்தநாளை தன் ரசிகர்களுடன் கொண்டாட முடிவு செய்து, மெட்ரோ ரயிலில் ஒரு பெட்டி முழுக்க முன்பதிவு செய்து, மீட்டப்பிற்கு அழைப்பு விடுத்தார். யாரும் எதிர்பாரா வண்ணம் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

    திடீரென்று மெட்ரோ ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியதால், அங்குக் கூட்ட நெரிசல் ஏற்பட்டதோடு  கூடியிருந்தவர்கள் நெரிசலில் சிக்குவதற்கான சூழல் ஏற்பட்டது. இதனால் உடனே கவுரவ் தனேஜாவை காவல்துறையினர் கைது செய்தனர்.



    மேலும் அந்த குறிப்பிட்ட இடத்தில் மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பித்து அங்கிருந்தவர்களை காவல்துறை பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தது.
    தனேஜா மீது இரண்டு பிரிவுகளில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.



    சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டில் டிடிஎஃப் வாசன் என்பவர் பிறந்தநாள் மீட்டப் நடத்தி அங்கும் ஆயிரக்கணக்கானோர் கூடியதால் பதற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Social media, Youtube

    அடுத்த செய்தி