ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

காத்து வாக்குல ரெண்டு காதல்.. ஒரே நேரத்தில் இரண்டு மனைவியும் கர்ப்பம்.. மகிழ்ச்சியை பகிர்ந்த யூடியூபர்!

காத்து வாக்குல ரெண்டு காதல்.. ஒரே நேரத்தில் இரண்டு மனைவியும் கர்ப்பம்.. மகிழ்ச்சியை பகிர்ந்த யூடியூபர்!

அர்மான் மாலிக் மற்றும் அவரது மனைவிகள்

அர்மான் மாலிக் மற்றும் அவரது மனைவிகள்

அர்மான் மாலிக்கின் இந்த பதிவிற்கு பலரும் லைக்ஸை குவித்து வந்தாலும், சிலர் கமெண்ட்ஸ் விமர்சித்தும் வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஹைதராபாத்தில் ஒரே நேரத்தில் தனது இரண்டு மனைவிகளும் கர்ப்பமாக இருப்பதாக யூடியூபர் ஒருவர் மகிழ்ச்சியை பதிவு செய்துள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த அர்மான் மாலிக் என்ற சோசியல் மீடிய பிரபலம், பாயல் மாலிக் ,கிருத்திகா மாலிக் ஆகிய இரு பெண்களை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 15 லட்சம், யூ-ட்யூபில் 20 லட்சம் பாலோயர்ஸ் உள்ளனர்.
 
View this post on Instagram

 

A post shared by Armaan Malik (@armaan__malik9)ஆரம்ப கட்டத்தில், முதல் மனைவி பாயலும்கும் அர்மானுக்கும் கருத்து மோதல் இருந்ததால், சில காலம் அர்மான் - கிருத்திகா உடன் டெல்லியில் தனியாக வசித்து வந்தார். தற்போது, சமாதானம் ஏற்பட்டு மூவரும் சேர்ந்து ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இந்த மூவர் ஜோடி தொடர்ந்து இன்ஸ்டாகிராம், யூ-ட்யூபில் வீடியோ பதிவேற்றி வருகின்றனர். இவர்களுக்கு சிராயு மாலிக் என்ற மகனும் உள்ளார்.

தற்போது அர்மான் மாலிக்கின் ஒரு ஒரு பதிவு தான் தற்போது இணையத்தில் நெட்டிசன்களை புலம்ப வைத்துள்ளது.  பாயல் மாலிக் ,கிருத்திகா மாலிக் இரண்டு மனைவிகளும் கர்ப்பமடைந்திருப்பதாக கடந்த வாரம் ஒரு பதிவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை பதிவிட்டிருந்தார் அர்மான்.

அர்மான் மாலிக்கின் இந்த பதிவிற்கு பலரும் லைக்ஸை குவித்து வந்தாலும், சிலர் கமெண்ட்ஸ் விமர்சித்தும் வருகின்றனர். மேலும், இரண்டு மனைவிகள் வைத்திருப்பதை சட்டம் அனுமதிக்கிறதா என்றும் சிலர் கேள்வியெழுப்பி வருகின்றனர். இந்த பதிவிற்கு சுமார் 1.50 லட்சம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர்.

First published: