YouTube Trending : 'மட்டன் விருந்து வாங்க...அழைப்பு விடுக்கும் யூடியூபர்ஸ் ப்ரியங்காவின் லூட்டிகள் - யூடியூப் ட்ரெண்டிங்

யூடியூப் ட்ரெண்டிங்

இன்றைய தினம் யூடியூப் ட்ரெண்டிங்கில் தனுஷின் ஜகமே தந்திரம் , லாக்டவுன் 2.0 அலப்பறைகள் ,வில்லேஜ் குக்கிங் ,விஜய் டிவியின் ப்ரியங்கா,ஆலியா மானசா,ராஜா ராணி ப்ரோமோ வீடியோ, நாம் இருவர் நமக்கு இருவர் ப்ரோமோ வீடியோக்கள் இடம்பெற்றுள்ளது.

  • Share this:
    இன்றைய தினம் யூடியூபில் ட்ரெண்டாகியுள்ள வீடியோ U1 Records யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள வீடியோ. இதுவரை இந்த வீடியோவை 854,518 பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா பாட்டுனா ஒரு போதை தான்பா என யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் இந்த வீடியோவை கேட்டு வருகின்றனர். மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என யுவன் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் அதன் டீசர் வெளியிடப்பட்டது. ’மேர்ஸைலா’ எனத் தொடங்கும் அந்தப் பாடல் ஜூன் 21-ம் தேதி மதியம் 12.06 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவித்தனர்.மதன் கார்க்கி எழுதியுள்ள இந்தப் பாடலை யுவனும், அவரது சகோதரி பவதாரணியும் இணைந்து பாடியுள்ள விஷயத்தையும், டீசரில் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு. இந்த டீசர் தான் U1 Records யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.



    தனுஷின் ஜகமே தந்திரம் இன்று நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியானது. மதுரையில் கொலை, ரவுடிசம் என்று வாழ்ந்து வரும் பரோட்டாக்கடை சுருளி லண்டனில் நடக்கும் கேங்வாரில் எதிரிகளை போட்டுத் தள்ளி உலக அகதிகளில் ஆபத்பாந்தவனாவதே ஜகமே தந்திரத்தின் பூர்வாங்க கதை.இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’. ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.



    கடந்த ஆண்டு மே மாதம் திரைக்கு வர வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது. அதைத்தொடர்ந்து திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது. அதேபோல் தனுஷூம் திரையரங்க வெளியீட்டையே எதிர்பார்ப்பதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இருப்பினும் கொரோனா சூழலை மனதில் கொண்டு, இன்று ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது. 190 நாடுகளில் 17 மொழிகளில் இப்படம் வெளியாவதாக முன்பே கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருந்தார்.இந்த படத்தின் ரிவியூ தான் தற்போது ட்ரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. ப்ளூ சட்டை மாறன் இந்த படம் குறித்து ரிவியூ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ 744,547 பார்வையாளர்களை பெற்றுள்ளது.

    அடுத்ததாக ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ள வீடியோ லாக்டவுன் 2.0 அலப்பறைகள் எனும் வீடியோ. இந்த வீடியோ இதுவரை 851,961 பார்வையாளர்களை பெற்றுள்ளது.ஒரு மனுஷன் எந்த அளவுக்கு இந்த லாக்டவுனில் வெட்டியாக இருந்துள்ளான் என்பதை நகைச்சுவையாக நக்கலைட்ஸ் சேனலில் வீடியோவாக பதிவிட்டுள்ளனர்.



    அடுத்ததாக ட்ரெண்டிங் பட்டியலில் இடம் பெற்றுள்ளது வில்லேஜ் குக்கிங் சேனலில் இடம் பெற்றுள்ள வீடியோ. அசைவ உணவான மட்டனை எவ்விதம் செய்வது என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த சேனலுக்கு உள்நாட்டில் மட்டும் அல்ல வெளிநாட்டிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் உண்டு.



    அடுத்த இடத்தில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ள வீடியோ ராஜா ராணி ப்ரோமோ வீடியோ. ராஜா ராணி - திங்கள் முதல் வெள்ளி இரவு 9:30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படுகின்றது. இந்த சீரியலுக்கு என தனியே ரசிகர் பட்டாளம் உண்டு.



    அடுத்ததாக ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ள வீடியோ நாம் இருவர் நமக்கு இருவர் ப்ரோமோ வீடியோ.2,308,676 பார்வையாளர்களை பெட்ரா இந்த வீடியோ ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.



    அடுத்த இடத்தில் 1,621,204 பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டாகியுள்ளது காற்றுக்கென்ன வேலி வீடியோ.



    தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் ரிவ்யூ வீடியோ ஒன்று அடுத்த இடத்தில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. இந்த படத்தின் திரை விமர்சனத்தை யூடியூபர் பிரசாந்த் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ 432,490 பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.



    864,010 பார்வையாளர்களை பெற்று டிரெண்டையுள்ளது ஆலியா மானசா வீடியோ. இவரது வீட்டில் துணிகளை அடுக்கி வைத்துள்ளதை வீடியோவாக போட்டுள்ளார். அவரது குழந்தைக்கு தேவையான பொருட்கள், அவருக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் மிகவும் சுத்தமாக அழகாக அடுக்கி வைத்துள்ளார். இதனை கண்ட இணையவாசிகள் , குழந்தைத் தனமான இந்த பேச்சு தான் உங்களுக்கு அதிக ரசிகர்களை தந்துள்ளது இதே போல் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளனர்.



    விஜய் டிவியின் ப்ரியங்கா அடுத்த இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளார். 726,974 பார்வையாளர்களை பெற்றுள்ள இவரது வீடியோவில் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் மென்ஸ்ட்ரல் கப்ஸ் குறித்து விளக்கமாக பேசுகின்றார்.



    இது அனைத்து பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் .
    Published by:Sankaravadivoo G
    First published: