Youtube Trending : என்ன நடக்குது இங்க..valimai update எங்க? யூட்யூபில் இன்றைய ட்ரெண்டிங்

இன்றைய ட்ரெண்டிங்

இன்றைய தினம் யூடியூப் ட்ரெண்டிங்கில் வில்லேஜ் குக்கிங் சேனல் ,Vaccination Sothanaigal ,நாம் இருவர் நமக்கு இருவர் ,Valimai Update ,ஜகமே தந்திரம் ரகிட்ட ரகிட்ட ரகிட்ட ரகிட்ட ,குக் வித் கோமாளி புகழ் , பிக்பாஸ் கவின் ,பிக்பாஸ் அச்சும்மா வீடியோக்கள் இடம்பெற்றுள்ளது.

  • Share this:
    யூடியூபில் கொடிகட்டி பறக்கும் வில்லேஜ் குக்கிங் சேனல் தாங்கள் டைமண்ட் பட்டன் வாங்கிய மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளனர்.

    வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனலை தெரியாதோர் இருக்க முடியாது. உணவுகளை சமைத்து யூடியூபில் வீடியோவாக வெளியிடுவதை இவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். மிக அதிக அளவிலான உணவுகளை சமைத்து ஊரில் உள்ள பலருக்கும் விருந்து படைத்து வந்த இந்த சேனல் தற்போது யூடியூபில் டைமண்ட் பட்டன் வாங்கி அசத்தி உள்ளனர்.

    இது குறித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வீடியோ ஒன்றை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில், எங்களை நேரில் பார்ப்பவர்களுக்கு தெரியும் நாங்கள் எப்படி பட்ட கிராமத்தில் வசிக்கிறோம் என.. அப்படிப்பட்ட கிராமத்தில் 6 மாசம் விவசாயம் போக மீதி 6 மாசம் நாங்க சும்மா இருப்போம். அப்டி சும்மா இருக்கும் போது தான் இந்த யூடியூப் சேனல் நாங்க ஸ்டார்ட் பண்ணோம். இன்னைக்கு எங்களுக்கு 1 கோடி சப்ஸ்கிரைபேர்ஸ் கிடைச்சுருக்காங்க.நாங்க உழைப்பை போட்டாலும் ஒத்துழைப்பை போட்டது நீங்களே. எல்லா மக்களுக்கும் நாங்கள் நன்றி சொல்லிக்கொள்கிறோம் என கூறியுள்ளனர்.

    ஏற்கனவே சில்வர் பட்டன்,கோல்டன் பட்டன் வாங்கியுள்ளோம் என அதையும் வீடியோவில் காண்பித்தனர். பின்னர் டைமண்ட் பட்டனை ஓபன் செய்து மிகவும் மகிழ்வுடன் தங்கள் ரசிகர்களுக்கு காட்டிய விதம் பார்வையாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ யூடியூபில் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது.



    யூடியூப் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்த அவர்கள், இந்த நிலையை நாங்கள் வருவதற்கு 3 வருஷம் ஆகியிருக்கு. இப்ப நாங்க எல்லாத்தையும் உள்ள வச்சிட்டு சமைக்க ஆரம்பிக்கிறோம் என தங்கள் உழைப்பை ஆரம்பித்து அனைவர்க்கும் ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்துள்ளனர்.

    Vaccination Sothanaigal எனும் வீடியோ அடுத்த இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த வீடியோ ட்ரெண்டிங்கில் 2ம் இடம் பிடித்துள்ளது. சோதனைகள் யூடியூப் சேனல் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.



    வேண்டும் வேண்டும் valimai update வேண்டும் என இந்த வீடியோவிற்கு கீழேயும் கமெண்ட்ஸ் வலிமை அப்டேட் கேட்டு ஒருவர் பதிவிட்டுள்ளார்.



    பாரதிகண்ணம்மா சீரியல் வீடியோ அடுத்த இடத்தில் ட்ரெண்டிங்கில் 3ம் இடத்தில் உள்ளது. பாரதியின் மகள் தனது தாய் யார் என தேடிக்கொண்டு இருக்கையில் அவள் கண்ணம்மா தான் என தெரிய வர அனைத்தையும் தெரிந்து கொண்ட குடும்பத்தார் முன்னிலையில் டாடி டாடி எங்கம்மா பேரு கண்ணம்மா என கூற..பேக்ரௌண்டில் கண்ணம்மா என ரஜினியின் காலா பட எடிட்டில் ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர் விஜய் டிவி.

    சமீப காலமாக கண்ணம்மா சீரியல் ப்ரோமோக்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் ரீச்சாகி வருகின்றது. அந்தவகையில் இந்த ப்ரோமோவும் 2,607,936 பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.



    என்னடா நடக்குது இங்க? என வடிவேலு கேப்பது போல் செந்தூரப்பூவே ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் விஜய் டிவியை கேள்வி கேட்டுள்ளனர். இந்த வார செந்தூரப்பூவே ப்ரோமோ அட்டகாசமாக அடுத்த இடத்தில் ட்ரெண்டாகியுள்ளது.



    செம்பருத்தியும் செந்தூரப்பூவும் மாகா சங்கமம் போல எனவும் நான் ஒரு நாள் நினைத்தேன் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று சேர்ந்து நடிக்கிறார்கள் சூப்பர் எனவும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

    நாம் இருவர் நமக்கு இருவர் (Naam Iruvar Namakku Iruvar ) சீரியல் ப்ரோமோ அடுத்த இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.5ம் இடத்தை பிடித்துள்ள இந்த வீடியோ 2,202,581 பார்வையாளர்களை பெற்றுள்ளது.



    வலிமை திரைப்படம் தொடர்பாக சாமியாடுபவரிடம் அஜித் ரசிகர்கள் குறி கேட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது. சாமி ஆடும் நபர் ஒவரிடம் சிலர், ஐயா வலிமை அப்டேட் சொல்லுங்க என்று கூறுகின்றனர். சாமி ஆடுபவரிடமே வலிமை அப்டேட் கேட்கும் அஜித் ரசிகர்களின் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து தமிழ் சினிமா ரிவியூ யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ 6ம் இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

     

     



     

    Valimai Update தலைப்போடு போடப்பட்டுள்ள இந்த வீடியோவில் படம் குறித்த சில சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளார் யூடியூபர். வலிமை படம் வெற்றி பெற தளபதி விஜய் ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள் என இந்த வீடியோவிற்கு விஜய் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.



    ஜகமே தந்திரம் ரகிட்ட ரகிட்ட ரகிட்ட ரகிட்ட ... அடுத்த இடத்தில் ட்ரெண்டிங்ல் உள்ளது. எனக்கு ராஜாவா நான் வாழுறேன் என தனுஷ் ஆட்டத்தில் யூடியூபே ஆட்டம் கண்டுள்ளது. செம பாட்டு எனவும், மண்டைக்குள்ள ஓடி கிட்டே இருக்கு எனவும் கமெண்ட்ஸ்கள் இந்த வீடியோவிற்கு அதிகம் வந்த வண்ணம் உள்ளது.3,886,510 பேர் இந்த பாடலை இதுவரை கேட்டுள்ளனர்.



    குக் வித் கோமாளி புகழ் , பிக்பாஸ் கவின் இருவரும் இணைந்து Pugazh's day out with Kavin என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள வீடியோ அடுத்த இடத்தில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.



    பிக்பாஸ் அச்சும்மா வீடியோ 13வது இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.Wow Life Celebrates Happie 39th Achuma Birthday என அவரது மகள் கியூட்டாக தனது அம்மாவிற்காக அவரது பிறந்த நாள் எவ்விதம் கொண்டாடலாம் என யோசித்து அதனை நிறைவேற்றியும் காட்டுகிறார். இந்த வீடியோவை பார்த்த அச்சுமாவின் ரசிகர்கள் அவருக்கு செல்லமாக வாழ்த்துக்களை மகிழ்வுடன் பகிர்ந்து வருகின்றனர்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: