• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • Youtube Trending : 'யூடியூபில் ட்ரெண்டாகும் அஜித்... பாரதி கண்ணம்மாவுக்கு நேர்ந்த துயரம்' - இன்றைய ட்ரெண்டிங்

Youtube Trending : 'யூடியூபில் ட்ரெண்டாகும் அஜித்... பாரதி கண்ணம்மாவுக்கு நேர்ந்த துயரம்' - இன்றைய ட்ரெண்டிங்

இன்றைய ட்ரெண்டிங்

இன்றைய ட்ரெண்டிங்

இன்றைய தினம் யூடியூப் ட்ரெண்டிங்கில் Valimai Motion Poster ,Thooriga ,Kannana Kanne - Promo,Lockdown Alaparaigal 3.0,Sathya (சத்யா), Oru Naal (Sirippu) Doctor, Highlights | West Indies v Australia, Barathi Kannamma, ஆகிய வீடியோக்கள் ட்ரெண்டாகி உள்ளது.

  • Share this:
    Valimai Motion Poster வீடியோ தொடர்ந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் உள்ளது. தற்போது இந்த வீடியோ 6,564,315 பார்வையாளர்களை பெற்றுள்ளது. 76,696 அஜித் ரசிகர்கள் வீடியோ குறித்து கமெண்ட்ஸ் பதிவிட்டுள்ளனர். 'நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார்.

    வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.



    ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெகுநாள் காத்திருந்த ரசிகர்களுக்கு இது பெரும் விருந்தாக இருந்தது. சமூக வலைதளங்களில் வலிமை ஃபர்ஸ்ட் லுக்கை கொண்டாடி தீர்த்து விட்டனர் அஜித் ரசிகர்கள்.

    Kannana Kanne ப்ரோமோ வீடியோ 1,989,920 பார்வையாளர்களை பெற்று யூடியூபில் ட்ரெண்டாகி உள்ளது. இது தெலுங்கு மொழித் தொடரான 'பௌர்ணமி' மற்றும் கன்னட மொழித் தொடரான 'மானசரே' போன்ற தொடர்களின் கதைக்கருவை மையமாக வைத்து மறு ஆக்கம் செய்யப்பட்ட தொடர் ஆகும். [2] இந்த தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஏ.ஆர் பிலிம் என்ற நிறுவனங்கள் இணைத்து தயாரிக்க, நிமிக்ஷிதா, ராகுல் ரவி, பிரித்திவிராஜ் மற்றும் நித்யா தாஸ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.



    Thooriga வீடியோ 1,009,532 பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டாகி உள்ளது. மணிரத்னம் க்யூப் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் நவரசா ஆந்தாலஜியில், கௌதம் இயக்கும் படத்துக்கு ’கிடார் கம்பி மேலே நின்று’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இந்த திரைப்படத்தின் தூரிகா பாடல் இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வைரலாகி உள்ளது.ஆகஸ்டில் நவரசா நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.



    Lockdown Alaparaigal 3.0 வீடியோ 809,257 பார்வையாளர்களை பெற்று அடுத்ததாக ட்ரெண்டாகி உள்ளது.1,341 பேர் இந்த வீடியோவிற்கு கமெண்ட்ஸ் பதிவிட்டுள்ளனர். நக்கலைட்ஸ் சேனல் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.



    Sathya சீரியல் ப்ரோமோ வீடியோ அதிகம் பார்க்கப்பட்டு ட்ரெண்டாகி உள்ளது. அமுல் பேபி,மற்றும் ரௌடி பேபி தங்கள் ரூமில் சுவற்றில் மாட்டி இருந்த பெயிண்டிங்கை காணாமல் தேடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அமுல்பேபி மாடியில் வர ரவுடி பேபி அக்கா பெயிண்டிங்கை எரித்துக் கொண்டு இருந்தார்.உடனே இதைப்பார்த்த அமுல் பேபி எரிந்துகொண்டிருந்த பெயிண்டிங்கை அணைத்து ரவுடி பேபியின் அக்காவின் கன்னத்தில் பளார் பளார் என்று ரெண்டு அறைவிட்டார். இந்த ப்ரோமோ யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.



    விஜய் டிவி பிரியங்கா தனது யூடியூபில் வெளியிட்டுள்ள Oru Naal (Sirippu) Doctor வீடியோ அடுத்ததாக ட்ரெண்டாகி உள்ளது.803,041 பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர் .விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமானவர், தொகுப்பாளினி பிரியங்கா. ... விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 8, ஸ்டார்ட் மியூசிக் ஆகிய நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இவர் தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் தற்போது யூடியூப் சேனலை தொடங்கி உள்ளார் . இந்த சேனலில் அவர் வெளியிடும் வீடியோக்கள் ட்ரெண்டிங்கில் இடம் பெரும்.



    Barathi Kannamma சீரியல் ப்ரோமோ அடுத்ததாக ட்ரெண்டாகி உள்ளது.4,489,897 பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். ஹேமாவை அழைத்துக்கொண்டு பாரதி அமெரிக்கா புறப்படுகிறார் இதனைப் பார்த்த கண்ணம்மா உடனே பாரதியை தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறார். இனிமே நீ யாரோ நான் யாரோ எனக்கூறிக் கொண்டு வீராப்பாக கிளம்பும் பாரதியை கண்ணம்மா ஆல் த பெஸ்ட் எனக் கூறி வழியனுப்பி வைக்கிறார்.

    இந்த வீடியோ யூடியூப் ட்ரெண்டிங்ல் இடம்பிடித்துள்ளது. ஹேமாவும் பாரதியும் வெளிநாடு செல்வதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என கண்ணம்மா போராடிக்கொண்டு இருக்கிறார். கண்ணம்மா தடுத்து நிறுத்துவாரா பாரதியை என்பதுதான் தற்போது யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து உள்ளது.



    Highlights | West Indies v Australia வீடியோ யூடியூப் ட்ரெண்டிங்கில் 5வது இடத்தில் ட்ரெண்டாகி உள்ளது.ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் ஆடி 20 ஒவர்களில் 141/6 என்று முடிய, தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 14.5 ஓவர்களில் 142/4 என்று அபார வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரை 3- 0 என்று கைப்பற்றியது.இந்த மேட்சில் நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்த வீடியோ யூடியூபில் ட்ரெண்டாகி உள்ளது.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: