• HOME
 • »
 • NEWS
 • »
 • trend
 • »
 • Youtube Trending : சார்பட்டா பரம்பரை அருமை ...ட்ரெண்டிங் பட்டியலில் கண்ணான கண்ணே! - இன்றைய யூடியூப் ட்ரெண்டிங்

Youtube Trending : சார்பட்டா பரம்பரை அருமை ...ட்ரெண்டிங் பட்டியலில் கண்ணான கண்ணே! - இன்றைய யூடியூப் ட்ரெண்டிங்

யூடியூப் ட்ரெண்டிங்

யூடியூப் ட்ரெண்டிங்

இன்றைய தினம் யூடியூப் ட்ரெண்டிங்கில் Valimai Motion Poster ,Sarpatta Parambarai ,Work From Home Paavangal ,Thooriga வீடியோ ,Kannana Kanne ப்ரோமோ வீடியோ, விஜய் டிவி பிரியங்கா ,Bahubalikku Oru Kattappa Lyric, ஆகிய வீடியோக்கள் ட்ரெண்டாகி உள்ளது.

 • Share this:
  Sarpatta Parambarai #1 ON TRENDING பட்டியலில் யூடியூபில் இடம்பிடித்துள்ளது . 3,781,308 பார்வையாளர்கள் மற்றும் 7,081 கமெண்ட்ஸ்களை இந்த வீடியோ பெற்றுள்ளது.வட தமிழக பேச்சு வழக்கை திரையில் பார்ப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியாகவும், கர்வமாகவும் இருக்கிறது.ரஞ்சித் அவர்களுக்கு நன்றி என இதற்கு கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

  இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் ட்ரைலரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.கபாலி, காலா என ரஜினியை வைத்து அடுத்தடுத்த படங்களை இயக்கிய பா.ரஞ்சித் தற்போது இயக்கியிருக்கும் திரைப்படம் சார்பட்டா பரம்பரை. வடசென்னையில் இயங்கி வந்த பாக்ஸிங் அணிகளை மையப்படுத்திய இந்தப் படத்தை கே9 ஸ்டுடியோஸுடன் இணைந்து ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

  ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன், அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சார்பட்டா பரம்பரை திரையரங்கில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. திரையரங்குகள் திறப்பது தள்ளிப் போவதால் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் தற்போது சார்பட்டா பரம்பரை படத்தின் ட்ரைலரை நடிகர் சூர்யா தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். குழுவினரின் கடின உழைப்பு திரையில் நன்கு தெரிவதாகக் குறிப்பிட்டு, ரஞ்சித் மற்றும் குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.சார்பட்டா பரம்பரைக்கும் இடியப்ப பரம்பரைக்கும் இடையில் நடக்கும் பாக்ஸிங் போட்டியை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. இடியப்ப பரம்பரையிடம் அனைவரும் தோற்றுப் போக, கடைசியில் ஆர்யா தன்னை நிரூபித்து எப்படி வெற்றி பெறுகிறார் என்பதை சுவாரஸ்யமாக படமாக்கியிருக்கிறார்கள்.  Valimai Motion Poster வீடியோ தொடர்ந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் உள்ளது. அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை 7,191,055 பேர் இதுவரை யூடியூபில் கண்டுகளித்துள்ளனர்.

  'நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார்.வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.  Work From Home Paavangal 3ம் இடத்தில் ட்ரெண்டாகி உள்ளது.பரிதாபங்கள் யூடியூப் சேனல் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர் . பலரும் இந்த வீடியோவிற்கு,விக்கிற பெட்ரோல் விலை க்கு 20 km வந்து டீ குடிக்கிறீங்க 🤔என்ன என்ன சொல்றா பாருங்க..கம்பி கட்ற கதையைலா சொல்றான்..கோபி... சமூகம் பெரிய இடம் போல.. விக்கிற விலைக்கு பெட்ரோல ஊத்தி லேப்டாப் கொளுத்துறான்னு சொல்லுறாரு..என கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.  Thooriga வீடியோ 1,587,337 பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டாகி உள்ளது. மணிரத்னம் க்யூப் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் நவரசா ஆந்தாலஜியில், கௌதம் இயக்கும் படத்துக்கு ’கிடார் கம்பி மேலே நின்று’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இந்த திரைப்படத்தின் தூரிகா பாடல் இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வைரலாகி உள்ளது.ஆகஸ்டில் நவரசா நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது  Kannana Kanne ப்ரோமோ வீடியோ 1,517,023 பார்வையாளர்களை பெற்று யூடியூபில் ட்ரெண்டாகி உள்ளது. இது தெலுங்கு மொழித் தொடரான 'பௌர்ணமி' மற்றும் கன்னட மொழித் தொடரான 'மானசரே' போன்ற தொடர்களின் கதைக்கருவை மையமாக வைத்து மறு ஆக்கம் செய்யப்பட்ட தொடர் ஆகும். இந்த தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஏ.ஆர் பிலிம் என்ற நிறுவனங்கள் இணைத்து தயாரிக்க, நிமிக்ஷிதா, ராகுல் ரவி, பிரித்திவிராஜ் மற்றும் நித்யா தாஸ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.  Bahubalikku Oru Kattappa Lyric Vide ட்ரெண்டிங்கில் 6ம் இடம் பிடித்துள்ளது.Think Music India யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோ வெளியாகி உள்ளது.அப்பாடா கடைசியா புரியாதபாஷையில் இருந்து தமிழுக்கு வந்துவிட்டார் ஆதி அண்ணா என இந்த பாடலுக்கு ரசிகர்கள் கமெண்ட்ஸ் தெரிவித்துள்ளனர்.ஜாதி மதம் இனமெல்லாம் நம்மள அடைக்கும் சிறைங்கடா ... உலகம் ரொம்ப பெருசு ரெக்க விரிச்சு பறங்கடா இந்த வரிகளை கோட் செய்து பலரும் கமெண்ட்ஸ் பதிவிட்டுள்ளனர்.  விஜய் டிவி பிரியங்கா தனது யூடியூபில் வெளியிட்டுள்ள Oru Naal (Sirippu) Doctor வீடியோ அடுத்ததாக ட்ரெண்டாகி உள்ளது. 911,378 பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர் .விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமானவர், தொகுப்பாளினி பிரியங்கா. ... விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 8, ஸ்டார்ட் மியூசிக் ஆகிய நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இவர் தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் தற்போது யூடியூப் சேனலை தொடங்கி உள்ளார் . இந்த சேனலில் அவர் வெளியிடும் வீடியோக்கள் ட்ரெண்டிங்கில் இடம் பெரும்.  கண்ணான கண்ணையே சீரியலின் அடுத்த ப்ரோமோ யூடியூப் ட்ரெண்டிங்கில் 10ம் இடம் பிடித்துள்ளது.1,574,973 பேர் இந்த ப்ரமோவை பார்த்துள்ளனர். நீ நேசிக்கும் உன் அப்பாவுக்காக உன்னை நேசிக்கும் அனைத்து இதயங்களையும் நீ கொள்கிறாய் மீரா என இந்த சீரியலின் ரசிகர்கள் சோக கடலில் மூழ்கி உள்ளனர். தற்போது இந்த சீரியல் ப்ரோமோ தான் யூடியூப் முழுமையும் ஆக்ரமிப்பு செய்துள்ளது.  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sankaravadivoo G
  First published: